ஆதார் கார்டில் இந்த அப்டேட்டை உடனே பண்ணிடுங்க!
ஆதார் அட்டை வைத்திருக்கும் பயனர்கள் அனைவரும் ஒவ்வொரு பத்து வருடங்களுக்குப் பிறகும் தங்கள் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்துகொள்ளுமாறு யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.
ஆதார் அட்டை இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆதார் அட்டையில் நமது முகம், கைரேகை, கண் போன்ற பல தனிப்பட்ட விஷயங்கள் நிரம்பியிருக்கிறது. தற்போது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒரு மிகமுக்கியமான அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. யுஐடிஏஐ வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆதார் அட்டை வைத்திருக்கும் பயனர்கள் அனைவரும் ஒவ்வொரு பத்து வருடங்களுக்குப் பிறகும் தங்கள் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்துகொள்ளுமாறு தெரிவித்துள்ளது. மேலும் ஆதார் அட்டை வைத்திருக்கும் மக்கள் பலரும் அவர்களின் பயோமெட்ரிக் டேட்டாக்களை அப்டேட் செய்ய அவர்களாகவே முன்வருவதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | UPI மூலம் பணம் செலுத்தும் போது இந்த விஷயங்களை மறந்துடாதீங்க!
மேலும் அரசாங்கமும் மக்களை அவர்களின் முகம் மற்றும் கைரேகை ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்து கொள்ள ஆகியவற்றை அப்டேட் செய்ய வலியுறுத்தும் என்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் பணிபுரியும் கூறியுள்ளனர். பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்து கொள்ளும் இந்த புதிய விதியிலிருந்து 70 வயதுக்கு மேற்பட்ட பயனர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்து இருக்கிறது. தற்போது 5 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பயோமெட்ரிக் டேட்டாக்களை அப்டேட் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் கார்டு வழங்குவதற்கு அந்த குழந்தைகளின் புகைப்படம் மற்றும் அந்த குழந்தைகளது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பயோமெட்ரிக் விவரங்களை அடிப்படையாக வைத்து வழங்கப்படுகிறது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் கார்டு பால் ஆதார் என்று அழைக்கப்படுகிறது, இதனை சாதாரண ஆதார் அட்டையிலிருந்து வேறுபடுத்தி காட்ட நீல நிறத்தில் ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. குழந்தைக்கு 5 வயது ஆகிவிட்டால் ஆதார் சேவா கேந்திராவில் குழந்தையின் பயோமெட்ரிக் கண்டிப்பாக அப்டேட் செய்யப்பட வேண்டும். கடந்த மார்ச் 31-ம் தேதிக்குள் 2.64 கோடி குழந்தைகளுக்கு பால் ஆதார் இருந்த நிலையில், இந்த ஆண்டு ஜூலை இறுதிக்குள் பால் ஆதார் கார்டுகளின் எண்ணிக்கை 3.43 கோடியாக உயர்ந்துள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மலிவு விலை பெட்ரோல் விரைவில் சாத்தியம்; வெளியான முக்கிய தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ