நியூடெல்லி: குடும்பத் தலைவரின் ஆவணங்களை கொண்டு குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் ஆதார் முகவரியை ஆன்லைனில் திருத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணை அடிப்படையாடக் கொண்டு இணைய வழியாக ஆதாரில் முகவரியை மாற்றி அமைக்கும் முறையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது, வாடகைக்கு குடி இருப்பவர்களின் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கும். ஆதார் அட்டையில் முகவரியை மாற்றி அமைப்பதற்கு தங்கள் பெயரில் போதுமான ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு இந்த வசதி அவசியமான  ஒன்றாகும். வாடகை வீட்டில் குடியிருப்போரின் குடும்பத்தினருக்கு (கணவன்/ மனைவி, பெற்றோர், குழந்தைகள்) இந்த புதிய வசதி பயனுள்ளதாக இருக்கும்.


ஆதார் அட்டை முகவரியை மாற்ற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கும், குடும்பத் தலைவருக்கும் இடையேயான உறவை குறிப்பிட்டு, அவர்களது பெயர்கள், ரேஷன் அட்டை, பள்ளி சான்றிதழ், திருமண சான்றிதழ், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை ஆதாரமாக சமர்ப்பித்து இதற்கு விண்ணப்பிக்கலாம். 


மேலும் படிக்க | EPFO முக்கிய தகவல்: இதை செய்யாவிட்டால் பெரிய இழப்பீடு செலுத்தவேண்டும்!! 


மேற்குறிப்பிட்ட உறவுமுறைக்கான ஆதார ஆவணம் இல்லாதபட்சத்தில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ள குறிப்பிட்ட வடிவத்தில் குடும்பத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட சுய சான்றிதழைப் பயன்படுத்தலாம்.


18 வயதிற்கு மேற்பட்ட எந்த ஒரு நபரும் குடும்பத் தலைவராகக் கருதப்படுவதோடு, தமது முகவரியை உறவினர்களுடன் இதற்காக பகிர்ந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


இணைய வழியாக முகவரியை மாற்றுபவர்கள், https://myaadhaar.uidai.gov.in/ என்ற வலைதளத்தில் இந்த வசதியைப் பெறலாம். அதன் பிறகு, குடும்பத் தலைவரின் ஆதார எண்ணை சரிபார்த்தல் நடைமுறைக்காக பதிவு செய்ய வேண்டும். பின்பு, உறவுமுறை ஆவணச் சான்றை இந்த இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


இந்த சேவையை பயன்படுத்துவதற்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய பிறகு, இந்த விண்ணப்பம் தொடர்பாக குடும்பத் தலைவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். குறுஞ்செய்தி கிடைத்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள், இணையதளத்திலேயே குடும்பத் தலைவர் தமது ஒப்புதலை தெரிவிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.


குறிப்பிட்ட காலக் கெடுவான 30 நாட்களுக்குள் இந்த கோரிக்கையை குடும்பத் தலைவர் நிராகரித்தாலோ, அல்லது தமது முகவரியை பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவிக்காவிட்டாலோ, சம்பந்தப்பட்ட விண்ணப்பம் நிறுத்தி வைக்கப்படும். இது சம்பந்தமான தகவல், விண்ணப்பித்தவருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரர் செலுத்திய கட்டணம் திருப்பிக் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


 குடும்பத் தலைவரின் ஆவணங்களை கொண்டு குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் ஆதார் முகவரியை ஆன்லைனில் திருத்தும் முறை அறிமுகம்


மேலும் படிக்க | 7 நாட்களில் கொரோனா பாதிப்பு சர்வதேச அளவில் அதிகரிப்பு! பீதி ஏற்படுத்தும் கோவிட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ