UIDAI JOBS: இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் வேலைவாய்ப்பு: முழு விவரம்
UIDAI Recruitment 2022: இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் பணிபுரிய ஆர்வமா? விண்ணப்ப நடைமுறை நாளை தொடங்குகிறது
UIDAI ஆட்சேர்ப்பு 2022: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இயக்குனர், உதவி இயக்குநர் ஜெனரல் (தொழில்நுட்பம்) மற்றும் பிற பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு விளம்பரம் வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் UIDAI இன் அதிகாரப்பூர்வ தளமான uidai.gov.in மூலம் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
UIDAI ஆட்சேர்ப்பு 2022: இயக்குனர், பிற பணிகளுக்கு, ஜூன் 13, 2022, அதாவது நாளை முதல் விண்ணப்ப நடைமுறை தொடங்குகிறது.
UIDAI ஆட்சேர்ப்பு 2022க்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். யான விண்ணப்பதாரர்கள் UIDAI இன் அதிகாரப்பூர்வ தளமான uidai.gov.in மூலம் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 16, 2022 வரை ஆகும்.
இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம், மொத்தம் ஐந்து பணியிடங்கள் நிரப்பப்படும். “விண்ணப்பங்களை, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்: கடைசி தேதியான ஆகஸ்ட் 16ம் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது” என்று ஆட்சேர்ப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை பார்க்க எஞ்சினியர்கள் தேவை
UIDAI ஆட்சேர்ப்பு 2022 இன் தகுதிகள், அனுபவம், தேர்வு அளவுகோல்கள் மற்றும் பிற விவரங்கள்
முக்கிய நாட்கள்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஆகஸ்ட் 16
காலியிடங்கள்: இயக்குனர்: 03
உதவி இயக்குநர் ஜெனரல் (தொழில்நுட்பம்): 01
இயக்குனர் (தொழில்நுட்பம்): 01
UIDAI ஆட்சேர்ப்பு 2022 க்கு எப்படி விண்ணப்பிப்பது?
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு ஆகஸ்ட் 16, 2022க்கு முன் அதிகாரப்பூர்வ இணையதளம் - uidai.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க | ICF Railway Recruitment 2022: சென்னையில் 876 ரயில்வே காலிப்பணியிடங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR