சமூக வலைதளங்களில் வைரலாகும் தாயின் கருப்பையில் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் வீடியோ....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குழந்தை பெற்றெடுப்பது பெண்கள் அனைவருக்கும் அமைந்த ஒரு வர பிரசாதம் என்று கூறினால் அது மிகையாகாது. தனது கருவில் தன்னுடைய வாரிசை 9 மாதம் சுமந்து பெற்றெடுக்கும் போது தான் ஒரு பெண் முழுமை அடைகிறாள் என்பதை அனைவரும் கூற கேட்டிருப்போம்.  அது போய் இல்லை உண்மை என்பதை அனைவரும் உணர்வோம். அதிலும், அதிலும் சிலருக்கு இரட்டை குழந்தைகளாக இருந்தால் சொல்லவே வேண்டாம். வானை முட்டும் அளவிற்கு மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்று விடுவார்கள். கர்பாமாக இருக்கும் காலத்தில், ஏழாவது மாதத்திலிருந்து கருவில் உள்ள குழந்தை கை கால்களை அசைக்க துவங்கும். 


அதன் அசைவை தாய் கவனிப்பதும் வழக்கம். இந்நிலையில், தாயின் கருப்பையில் வளரும் இரட்டை குழந்தைகள் கருப்பைக்குள் சண்டை போடும் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோ பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


சீனாவை சேர்ந்த தாவோ என்பவா் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த பெண்ணை மருத்துவா்கள் ஸ்கேன் செய்து பாா்த்தனா். அப்போது  வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகள் சண்டையிட்டு விளையாடிக் கொண்டிருந்தன. இதை பார்த்து குழந்தைகளின் பெற்றோா் மகிழ்ச்சியடைந்தனர். இதை வீடியேவாக பதிவு செய்து இணையதளத்தில் அவா்கள் வெளியிட்டனர். இந்த காட்சியை கண்டு இணையதள வாசிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த காட்சியானது தற்போது 25 லட்சம் லைக்ஸ் மற்றும் 80 ஆயிரம் கருத்துக்களை பெற்றுள்ளது.



இந்நிலையில் அந்த பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து விட்டது. அந்த பெண் விரும்பி சாப்பிடும் பழங்களான செர்ரி மற்றும் ஸ்டிராபெரி என்பனவற்றின் பெயரை தன்னுடைய மகளுக்கு சூட்டி மகிழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.