புதுடெல்லி: கொரோனா காலத்தில், செப்டம்பர் முதல் நாடு முழுவதும் பல பொதுத்துறை வங்கிகள் வீட்டுக்கு வீடு வங்கி வசதிகளை வழங்க தொடங்கின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் SBI உட்பட பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற வசதிகளை வழங்கத் தொடங்கின. இப்போது யூனியன் பாங்க் ஆப் இந்தியாவும் (Union Bank of India) இந்த வகை சேவையைத் தொடங்கியுள்ளது.


இந்த நடவடிக்கை 2018 இல் நிதிச் சேவைத் துறையால் தொடங்கப்பட்ட EASE (மேம்பட்ட அணுகல் மற்றும் சிறப்பான சேவை) சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாகும். நிதிச் சேவைகளின் செயலாளர் தெபஷிஷ் பாண்டா, 'இந்த சேவை தொடங்கப்பட்ட பின்னர், இப்போது யார் வேண்டுமானாலும் தங்கள் வீட்டில் அமர்ந்தபடியே வங்கி வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்' என்றார்.


வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை


PSB இன் டோர் ஸ்டெப் பாங்கிங் (Door step banking), அதாவது வீட்டு வாசலில் வங்கிச் சேவை முயற்சியில் வாடிக்கையாளர் வசதிக்கு முன்னுரிமை அளிக்கப்படுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு யுனிவர்சல் டச் பாயிண்ட்ஸ், வெப் போர்டல் அல்லது மொபைல் செயலிகள் மூலம் அவர்களின் வீடுகளிலேயே வங்கிச் சேவைகள் கிடைக்கப்பெறும்.


நாட்டின் 100 மையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சேவை வழங்குநர்களால் (Service Provider) நியமிக்கப்பட்ட டோர் ஸ்டெப் முகவர்களால் இவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.


ALSO READ: Gold Loan-ல் சிறப்பு சலுகைகளை வழங்குகிறது SBI: முழு விவரம் உள்ளே


என்ன வசதிகள் கிடைக்கும்?


1. பண பரிவர்த்தனை செய்யலாம்.


2. காசோலைகளைப் பெறுவது, காசோலை புத்தகங்களைப் பெறுவது, டிமாண்ட் டிராஃப்டுகளை கொடுப்பது போன்றவற்றை நீங்கள் செய்யலாம்.


3. வருமான வரி தொடர்பான பணிகளைச் செய்யலாம்


4. வாழ்க்கை சான்றிதழ் (Life Certificate) சமர்ப்பிக்கும் வசதி


5. ஒரு நாளில் 1 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரை பணத்தை எடுக்க முடியும்


6. ஒரு நாளில் 1 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரை பணத்தை டெபாசிட் செய்யலாம்.


7. நிலையான வைப்பு ரசீது


8. கணக்கு அறிக்கை


9. வரைவு அல்லது படிவம் 16 சான்றிதழ் ஆகியவற்றை பெறுதல்


முன்பதிவு இங்கே செய்யலாம்


1. Door step வங்கி சேவைக்கு, கட்டணமில்லா 1800-103-7188 மற்றும் 1881-213-721 ஆகிய தொலைபேசி எண்களில் அழைக்கலாம்


2. www.psbdsb.in என்ற வலைத்தளத்திலும் இந்த சேவையை முன்பதிவு செய்யலாம்.


3. DSB mobile செயலி மூலம் நீங்கள் டோர் ஸ்டெப் வங்கி சேவையின் நன்மைகளைப் பெற முடியும்.


Door step வங்கி சேவைகளுக்கு கட்டணம் உள்ளதா?


Door step வங்கி சேவைகளை நீங்கள் இலவசமாகப் பெற முடியாது. இதற்காக நீங்கள் சில கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும். ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே டூர் ஸ்டெப் வங்கி சேவையை வங்கி வழங்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


வசதி கட்டணம் (ரூபாய்)

பணம் டெபாசிட் செய்ய  

75 + GST
பணம் எடுக்க 75 + GST

காசோலை டெபாசிட் செய்ய

75 + GST

செக்புக் ஸ்லிப்

75 + GST

நிலையான வைப்பு

0

வங்கி அறிக்கை

0
நடப்பு கணக்கு அறிக்கை  100 + GST

ALSO READ: குறைந்த வட்டியில் தங்க கடனை வழங்கும் SBI... விண்ணப்பிப்பது எப்படி?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR