ரயில்வே ஊழியர்களுக்கு GOOD News! 78 நாள் போனஸ் வழங்க அமைச்சரவை ஒப்புதல்!
விஜயதசமி பண்டிகைக்கு முன்னதாக, ரயில்வே ஊழியர்களுக்கான, 2021-22 ஆம் ஆண்டிற்கான 78 நாள் போனஸ் வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஇஏ) ஒப்புதல் அளித்துள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் செய்தி: விஜயதசமி பண்டிகைக்கு முன்னதாக, 2021-22 ஆம் ஆண்டிற்கான ரயில்வே ஊழியர்களுக்கான 78 நாள் திறமைக்கு ஏற்ற வகையில் போனஸ் வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஇஏ) ஒப்புதல் அளித்துள்ளதாக ஜீ பிசினஸ் நியூஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், சுமார் 11 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். இதனால், இந்திய ரயில்வேக்கு 2,000 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். இது தவிர, மேலும் ஒரு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நான்கு சதவீத உயர்வுக்கும் அரசாங்கம் அனுமதி வழங்கியது.
முன்னதாக, மத்திய அமைச்சரவை 78 நாட்கள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தித்திறன் சார்ந்த போனஸுக்கு ( Production-Linked Bonus - PLB) ஒப்புதல் அளித்துள்ளது. இது 1.156 மில்லியன் நான்-கேஸடட் ரயில்வே ஊழியர்களுக்கு பயனளிக்கும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பிடிஐயிடம் தெரிவித்தார்.
முந்தைய ஆண்டு உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் வழங்க கிட்டத்தட்ட ரூ.1,985 கோடி செலவானது. விஜயதசமி மற்றும் தீபாளி பண்டிகைகளுக்கு முன்னதாக போனஸ் அறிவிக்கப்படுவது வழக்கம். தகுதியுள்ள நான்-கேஸடட் ரயில்வே ஊழியர்களுக்கு PLB செலுத்துவதற்காக நிர்ணயிக்கப்பட்ட ஊதியக் கணக்கீட்டு உச்சவரம்பு மாதம் ரூ.7,000/- ஆகும். தகுதியான ரயில்வே ஊழியருக்கு 78 நாட்களுக்கான போனஸாக அதிகபட்சம் ரூ.17,951 வழங்கப்படும்.
மேலும் படிக்க | Indian Railways: 94 ஆண்டுகளுக்கு முன்பே ரயில்களில் AC வசதி; ஆச்சர்ய தகவல்..!!
இரயில்வேயில் உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ் நாடு முழுவதும் பரவியுள்ள RPF/RPSF பணியாளர்களைத் தவிர்த்து அனைத்து ரயில்வே நான்-கேஸடட் ஊழியர்களையும் உள்ளடக்கியது. 1979-80 ஆம் ஆண்டில் PLB என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய அரசின் முதல் துறை சார்ந்த நிறுவனமாக ரயில்வே உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் செயல்திறனில், முக்கிய உள்கட்டமைப்பு நிறுவனமாக ரயில்வேயின் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் செயல்திறனில், முக்கிய உள்கட்டமைப்பு நிறுவனமாக ரயில்வேயின் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்திய ரயில்வே ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு (NFIR) பொதுச் செயலாளர் ராகவய்யா, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு எழுதிய கடிதத்தில், ரயில்வே ஊழியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், முந்தைய ஆண்டுகளை விட அதிக நாட்கள் போனஸ் ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க | Indian Railways: வந்தே பாரத் விரைவு ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி!
மேலும் படிக்க | ஆயிரத்தை கோடிகளாக்கிய இந்தியாவின் Warren Buffet கடைபிடித்த 5 முதலீட்டு டிப்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ