கலிஃபோர்னியாவின் ஒரு கடற்கரை நகரம், மூலப்பொருளிலிருந்து தயாரிக்கப்படும் வெட்டுக்கிழங்குகளைத் தடை செய்துள்ளதன் மூலம் அதன் பிளாஸ்டிக் பழக்கத்தை தகர்த்தெறிந்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வழக்கத்திற்கு ஆதரவளித்து, மலிபு நகர கவுன்சில் திங்களன்று வாக்களித்து விழிப்புணர்வு செயல்பாட்டுகளையும் நடத்தியுள்ளது.


இதுகுறித்து நகர கவுன்சிலர் லாரா ரொசெண்டல் தெரிவிக்கையில் "இது சரியான விஷயம்," என தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் அனைவரும் இந்த தடைக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


வரும் ஜூன் 1-ம் தேதி முதல் இந்த மசோதா அமல்படுத்தப்படும் எனவும், ஏற்கனவே மாலிபுவில் நிரம்பி இருக்கும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் நுரைக் கொள்கலன்களைப்  அகற்றுவதற்கான நடவடிக்கைகள் நகர்ந்து வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


"பெருங்கடல், கடற்கரைகள் மற்றும் இயற்கை சூழல்கள் என்பது மலிபு மக்கள் வாழ்வின் ஒரு மைய பகுதியாகும்," இந்த வளங்களை அடுத்த சத்ததியருக்கு மணம் மாறாமல் தருவது நம் கடமை, அதற்கான ஒரு படியே இந்த முயற்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பிளாஸ்டிக் தடை குறித்து தற்போது பல நாடுகளிலும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது, இந்த தடையினால் மக்கள் மட்டும் அல்லாமல் அனைத்து உயிர் ஜீவிகளும் பயன்பெருவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்தியாவில் சில மாநிலங்களில் பிளாஸ்டிக் பைகளுக்கான தடை அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் கடைப்பிடிக்கப் படுகிறதா என்பது தான் கேள்விக்குறி!