தாஜ்மகாலைப் பற்றிய இந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா?! - Tajmahal-Facts!
தாஜ்மகால் மீண்டும் சர்ச்சையாகியுள்ள நிலையில், தாஜ்மகாலைப் பற்றிய பல்வேறு சுவாரஸ்யத் தகவல்களைத் தற்போது பார்க்கலாம்!
தாஜ்மகால் தொடர்பான சர்ச்சை மீண்டும் கிளம்பியுள்ளது. இந்த நேரத்தில் உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகால் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்!
1. தாஜ்மகாலைக் கட்டி முடிக்க ஆன மொத்த செலவு 3.2 கோடி ரூபாயாம். என்னது, இவ்வளவுதானானு ஷாக் ஆகிடாதீங்க. இது அந்தக் காலத்துக் கணக்கு மட்டும்தான். இன்றைய தேதியில இதோட மதிப்பு கிட்டத்தட்ட 7000 கோடி ரூபாயாம்.
2. தாஜ்மகால் உருவாக்கத்தில் முதன்மைக் கட்டிடக் கலைஞராகப் பணிபுரிந்ததாகக் கூறப்படும் உஸ்தத் அகமது லஹாரி ஓர் இந்தியர் என்றே பெரும்பாலானோர் நினைத்துவருகின்றனர். ஆனால் அவர் இந்தியரே இல்லையாம் அவர் தற்போதுள்ள ஈரான் நாட்டைச் சேர்ந்தவராம்.
3. தாஜ்மகாலைக் கட்டும் பணி 1632ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் அது கட்டிமுடிக்கப்பட்டது 1653ஆம் ஆண்டில்தான். அந்த வகையில் சுமார் 22 ஆண்டுகள் ஆகியுள்ளது இதைக் கட்டிமுடிக்க. தாஜ்மகாலை சுமார் 22 ஆயிரம் தொழிலாளர்கள் இணைந்து கட்டிமுடித்துள்ளனர்.
4. கனமான பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு வசதியாக, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகள் தாஜ்மகால் உருவாக்கத்தில் பயன்படுத்தப்பட்டதாம்.
5. கறுப்பு மார்பிளில் இதேபோன்ற மற்றொரு தாஜ்மகாலைக் ஆற்றின் குறுக்கே கட்ட ஷாஜகான் திட்டமிட்டிருந்தாராம். ஆனால் தனது மகன்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அது நடக்கவில்லையாம்.
6. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பாதுகாப்பு கருதி, தாஜ்மகாலைச் சுற்றி பாதுகாப்பு வேலி போடப்பட்டதாம். அது பார்ப்போருக்கு மூங்கில் கட்டுகள் அடுக்கிவைக்கப்பட்டிருப்பதைப் போன்ற தோற்றத்தில் இருந்ததாம்.
7. உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகாலை ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் பேர் நேரில் வந்து பார்வையிடுகிறார்களாம்.
மேலும் படிக்க | விஜய் படத்தைப் பங்கமாகக் கலாய்த்த இயக்குநர்! - அதுவும் இவ்வளவு ஓப்பனாகவா?
8. காற்று மாசுபாடு காரணமாக தாஜ்மகாலின் நிறம் மாறுவதைத் தடுக்கும் விதமாக பார்வையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தாஜ்மகாலைச் சுற்றியுள்ள பகுதிகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த மட்டுமே அனுமதி உண்டு.
9. தாஜ்மகால் விளக்கொளிக்கு ஏற்ப விதவிதமான நிறங்களில் காட்சியளிக்கும். அதிகாலையில் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சிதரும் தாஜ்மகால், மாலையில் வெள்ளை நிறத்திலும் இரவு நேரங்களில் லேசான நீல நிறத்திலும் காணப்படும்.
10. வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் தாஜ்மகாலின் மாதிரியை அவரது நாட்டிலேயே உருவாக்கினார். வங்கதேசத்தின் தாஜ்மகால் என அழைக்கப்படும் இதைக் கட்டிமுடிக்க சுமார் 5 ஆண்டுகள் ஆனதாம்.
மேலும் படிக்க | ‘புஷ்பா- 2’வில் என்ன ஸ்பெஷல்?! - ‘லீக்’ ஆன ‘ஃபையர்’ அப்டேட்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR