ஆதார் அட்டையை ஆன்லைனில் புதுப்பிக்கவும்; எளிமையான செயல்முறை இதோ
Aadhaar: ஆதார் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அமைப்பாக மாறியுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் 12 இலக்க எண்ணை வழங்குகிறது.
ஆதார் அப்டேட்: இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை முக்கியமான அடையாள அட்டை ஆகும். ஆதார் மூலம், வீட்டில் இருந்தபடியே பல அரசின் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் ஆதாரில் ஏதேனும் தவறு இருந்தால், அதை ஆன்லைனில் திருத்திக் கொள்ளலாம். அல்லது ஆதார் மையத்திற்குச் சென்று புதுப்பிக்கலாம்.
ஆதார் அட்டை கட்டாயம்
இன்று முதல் அனைத்து முக்கிய வேலைகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாகும். இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் ஆதார் அட்டையில் ஒரு சிறிய தவறு கூட இருந்தால் அது உங்கள் எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, ஆதாரில் ஏதேனும் அப்டேட் செய்ய வேண்டுமானால், யுஐடிஏஐ இணையதளத்தைப் பார்வையிடவும் அல்லது ஆதார் மையத்தைப் பார்வையிடவும்.
மேலும் படிக்க | மொபைல் எண் மாறிவிட்டதா? இன்றே ஆதாருடன் இணைத்து விடுங்கள்: செயல்முறை இதோ
உங்களுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால், உள்ளூர் மொழியிலும் புதுப்பிக்கலாம். ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு யுஐடிஏஐ இந்த வசதியை வழங்குகிறது.
உங்கள் ஆதாரை இந்த வழியில் புதுப்பிக்கவும்
முதலில் யுஐடிஏஐ இணையதளத்திற்கு செல்லவும். இதற்குப் பிறகு, ஆதார் சேவை பிரிவில், சுய சேவை புதுப்பிப்பு விருப்பத்தை கிளிக் செய்யவும். 12 இலக்க ஆதார் எண்ணை இங்கே உள்ளிடவும். சரிபார்த்த பிறகு கேப்ட்சா பாதுகாப்பு குறியீட்டை உள்ளிடவும்.
மற்ற விவரங்களை உள்ளிட்டு, ஓடிபி உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு ஒரு புதிய பக்கம் திறக்கும். இங்கே நீங்கள் தரவைப் புதுப்பி பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, பிராந்திய மொழியைத் தேர்ந்தெடுத்து உங்கள் விவரங்களைப் புதுப்பிக்கவும்.
அதன் பிறகு மீண்டும் ஓடிபி வரும், அதை உள்ளிடவும். இங்கு தொடரவும் பட்டனில் டேப் செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
அத்துடன் நீங்கள் எந்த தகவலையும் புதுப்பிக்கலாம். இதற்கு உங்கள் மொபைல் எண் மற்றும் ஆதார் எண் மட்டுமே தேவைப்படும். அருகில் உள்ள யுஐடிஏஐ மையத்திற்குச் சென்று ஆதாரை புதுப்பிக்கலாம்.
மேலும் படிக்க | Aadhaar: உங்கள் ஆதார் அட்டையை வேறு யாராவது பயன்படுத்தினார்களா? கண்டறிய சுலப வழி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR