ஸ்மார்ட் போன் தேவையில்லை... சாதாரண போனிலும் இனி பணப் பரிவர்த்தனை செய்யலாம்!
பட்டன் போன்களுக்கான `யுபிஐ-123 பே` என்ற புதிய பணப் பரிவர்த்தனை சேவையை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் ஸ்மார்ட் போன்களில் இணைய இணைப்புடன் யூபிஐ ஐடியுடன் பல கோடி மக்கள் தினசரி பணப் பரிவர்த்தனைகளைச் செய்து வருகின்றனர். ஆனால், இந்தச் சேவையைப் பயன்படுத்த முடியாத சாதாரண போன் வைத்துள்ள வங்கி வாடிக்கையாளர்களுக்காகவே ஒரு புதிய சேவையைக் கொண்டுவர இருப்பதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் முன்னதாகவே அறிவித்திருந்தார். அதன்படி தற்போது, பட்டன் போனைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் "யுபிஐ-123 பே" எனப்படும் சாதாரண செல்போன்களுக்கான யுபிஐ சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: எஃப்.டி வட்டி விகிதங்களில் ஏற்றம்
எப்படி பயன்படுத்துவது?
பட்டன் போன் வைத்துள்ளவர்கள் தங்களின் மொபைல் நம்பரை வங்கிக் கணக்குடன் இணைக்கவேண்டும்.
டெபிட் கார்டு எண்ணை உள்ளீடு செய்து கடவுச்சொல்லை உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
இதையடுத்துப் பணம் செலுத்த விரும்பும்போது, பணம் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரது எண்ணை டயல் செய்ய வேண்டும்.
பின்னர் அணுப்ப வேண்டிய பணத்தின் அளவை உள்ளிட்டு, முன்னதாக உருவாக்கிய கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.
இதன் பிறகு சில விநாடிகளில் பணம் பரிவர்த்தனையாகி பெறுநருக்குப் பணம் அனுப்பப்பட்டுவிடும்.
கேஸ் பில், மொபைல் ரீசார்ஜ், ஸ்கேன் அண்ட் பே செய்யக்கூடிய கடைகளுக்கு இந்த "யுபிஐ - 123 பே"வைப் பயன்படுத்த முடியும். இணைய இணைப்பு தேவையில்லை என்பது சிறப்பம்சம். மேலும் இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கும், எதிர்கொள்ளும் சிக்கலைத் தெரிவிக்கவும் 14431 அல்லது 1800891333 என்ற எண்ணுக்கு போன் செய்யலாம் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இச்சேவை 24 மணி நேரமும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR