வாய்ஸ் நோட் மூலம் யுபிஐ-ல் பணப் பரிமாற்றம் செய்வது எப்படி?
யுபிஐ இப்போது புதிய வடிவம் எடுத்திருக்கிறது. இனி குரல் மூலம் பணப் பரிவர்த்தனையை செய்ய முடியும்
யுபிஐ பணப் பரிமாற்றம்
டிஜிட்டல்துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகிவிட்டது. கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் எளிதாக பணம் அனுப்ப உதவுகின்றன. அதுபோல சாதாரண டீக்கடையில் தொடங்கி மிகப்பெரிய துணிக்கடைகள், நகைக்கடைகள் என அனைத்து இடங்களிலும் ‘க்யூஆர் கோடு’ மூலமாக பணம் அனுப்பும் முறையை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
யுபிஐ-ல் புதிய அப்டேட்
இந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேலும் எளிதாக்கும் விதமாக யுபிஐ செயலிகள் மற்றும் பரிவர்த்தனை முறைகள் மேம்படுத்தப்பட்டும் வருகின்றன. அந்த வகையில் தற்போது யுபிஐ செயலிகள் பயன்படுத்தும்போது 4 இலக்க பாஸ்வேர்டு எண்ணுக்குப் பதிலாக குரல் அடையாளம் மூலமாக பணம் அனுப்ப முடியும் என்ற புதிய அப்டேட் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | Business: ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகத்தில் உச்சத்தைத் தொடும் கேகேஆர் முதலீடு!
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இந்த வசதி விரைவில் இந்தியாவில் நடைமுறைக்கு வரவிருக்கிறது. மேலும், இணைய வசதி இல்லாமல் பணப்பரிவர்த்தனை செய்ய யுபிஐ லைட் செயலி உருவாக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மத்திய ரிசர்வ் வங்கி இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம், மொழி செயலாக்கம் (natural language processing), குரல் அடையாளம் (voice recognition) மூலமாக செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
குரல் மூலம் யுபிஐ-ல் பணம் அனுப்புவது எப்படி?
- ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட் ஸ்பீக்கரில் குரல் ஒலிப்பதிவு முறை மூலமாக உங்கள் போனில் இருந்து பணம் அனுப்ப முடியும்.
- உதாரணமாக நீங்கள் யாருக்கு பணம் அனுப்ப வேண்டும், எவ்வளவு அனுப்ப வேண்டும் என்பதையும் குறிப்பிட்டால் உங்கள் குரலை அடையாளம் கண்டு பணம் அனுப்பும்.
- இது பயனர்களுக்கு மிகவும் எளிதாகவும் நேரத்தை மிச்சப்படுத்துவதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
- இதற்கு வாலட், கார்டு, பாஸ்வேர்டு என எதுவும் தேவையிருக்காது. குறிப்பாக வயதானவர்கள், கண் பார்வையற்றவர்களுக்கு உள்ளிட்டோருக்கு உதவும்.
- இதன் மூலமாக எண்ம பணப்பரிவர்த்தனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ