வங்கிகளுக்கு சென்று மணிக்கணக்கில் காத்திருந்து பணத்தை அனுப்பிய காலம் எல்லாம் மலையேறிவிட்டது. மொபைல் பேங்கிங் தான் இப்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட்.  வங்கி பணப் பரிவர்த்தனை கையடக்க கருவிக்குள் கொண்டு வந்தது ஒரு வகையான டிஜிட்டல் புரட்சி என்று கூட சொல்லலாம். எவ்வளவோ நன்மைகள் இருக்கும் யுபிஐ பேமெண்ட்ஸில், பணப்பரிவர்த்தனைகளை நொடிப் பொழுதில் மேற்கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனாலும், இதிலும் சில தவறுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. தெரிந்தோ அல்லது தெரியாமலோ தவறு செய்துவிட்டால், நீங்கள் இழக்கும் பணத்தை மீண்டும் பெறுவது என்பது மிக கடினமான விஷயம் என்பதால், ஒரு சில விஷயங்களை நீங்கள் கவனத்தைக் கொள்ளுங்கள். 


மேலும் படிக்க | Twitter vs Income: விளம்பரம் கொடுப்பவர்களின் சக்தியை ஏன் முன்னிலைப்படுத்த வேண்டும்: எலோன் மஸ்க்


பணம் செலுத்தும் முன்


UPI மூலம் ஒருவருக்கு பணம் செலுத்துவதற்கு முன்பு நீங்கள், மொபைல் எண் மற்றும் யுபிஐ ஐடியை ஒருமுறைக்கு இருமுறை நீங்கள் செக் செய்து கொள்ள வேண்டும்.  உங்களுக்கு அனுப்பப்பட்ட எண்கள் யாருடையது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். ஒரு எண் மாறியிருந்தால் கூட வேறொருவருக்கு பணம் அனுப்பிவிடும் ஆபத்து அதிகம். மேலும், சில தவறான எண்களுக்கு யுபிஐ மூலம் பணம் அனுப்பும்போது உங்களின் தகவல்களை திருடும் வாய்ப்புகளும் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 


யுபிஐ பாஸ்வேர்டு


யுபிஐ அக்கவுண்டைப் பொறுத்தவரை உங்களுடைய பாஸ்வேர்டை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பாஸ்வேர்டு தகவல்களை பெற்று மோசடிகளை அரங்கேறுவது அண்மைக்காலமாக அதிகம் நடைபெறுகிறது. மோசடி நபர்கள் போலி அழைப்புகளை மேற்கொண்டு பாஸ்வேர்டை பெற்றுக் கொண்டு உங்களுக்கு தெரியாமலேயே வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடிக் கொள்வார்கள். சைபர் கிரைம் போலீஸாரும் இதனையே எச்சரிக்கிறார்கள். நீங்கள் இல்லாத சமயத்தில் உங்கள் மொபைலை எடுத்து பணத்தை அனுப்பவும் வாய்ப்புகள் உள்ளன. 



போலி செயலிகள்


போலி செயலிகள் உங்கள் மொபைலில் நீங்கள் பதிவிறக்கம் செய்திருந்தால், அந்த செயலிகள் உங்கள் யுபிஐ செயலியின் அனைத்து தகவல்களையும் திருடிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.  இதன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து சைபர் கிரைம் மோசடியார்கள் கைவரிசை காட்ட வாய்ப்புகள் உள்ளது. தனிப்பட்ட தகவல்கள் உள்ளிட்டவையும் களவு போகும். இதனால், யுபிஐ  பேமெண்ட்ஸில் இந்த விஷயங்களில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | Google Self Repair: மொபைல் ரிப்பேரா? நீங்களே சரிபார்க்க உதவும் கூகுள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR