UPI மூலம் ஒரு நாளைக்கு எவ்வளவு தொகை டிரான்ஸக்ஷன் செய்ய முடியும்?
என்பிசிஐ-ன் படி, யூபிஐ மூலம் ஒரு நபர் ஒரு நாளில் செலுத்தக்கூடிய அதிகபட்சத் தொகை ரூ.1 லட்சம் ஆகும், இருப்பினும் இந்த டிரான்ஸாக்ஷன் வரம்பு வங்கிக்கு வங்கி மாறுபடும்.
ஆன்லைனில் பணம் செலுத்துவது எளிதானது மட்டுமின்றி பணப்பையை உடன் சுமந்து செல்ல வேண்டிய தேவையில்லை. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ( என்பிசிஐ ) படி, யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது பல வங்கிக் கணக்குகளை ஒரே மொபைல் பயன்பாட்டில் (எந்தவொரு பங்கேற்பு வங்கியிலும்) இணைக்கிறது. எந்த நேரத்திலும் எங்கு இருந்தாலும் நாம் யூபிஐ மூலமாக பணம் செலுத்த முடியும், இருப்பினும் யூபிஐ மூலம் நாம் ஒருவருக்கு அனுப்பக்கூடிய பணத்திற்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முதல் ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ போன்ற தனியார் வங்கிகள் வரை அனைத்து வங்கிகளும் ட்ரான்ஸாக்ஷனுக்கு ஒரு குறிப்பிட்ட வரம்பை நிர்ணயித்துள்ளது. என்பிசிஐ-ன் படி, யூபிஐ மூலம் ஒரு நபர் ஒரு நாளில் செலுத்தக்கூடிய அதிகபட்சத் தொகை ரூ.1 லட்சம் ஆகும், இருப்பினும் இந்த டிரான்ஸாக்ஷன் வரம்பு வங்கிக்கு வங்கி மாறுபடும் என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | ChatGPT: ஆப்பிள் வாட்சில் சாட்ஜிபிடி..! வாட்ஸ்அப் முதல் வாய்ஸ் கால் வரை செய்யலாம்
1) பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ): வங்கியின் யூபிஐ டிரான்ஸாக்ஷன் வரம்பு ரூ. 1 லட்சம் மற்றும் தினசரி வரம்பு ரூ. 1 லட்சம்.
2) ஹெச்டிஎஃப்சி வங்கி: வங்கியின் யூபிஐ டிரான்ஸாக்ஷன் வரம்பு ரூ. 1 லட்சம் (புதிய வாடிக்கையாளருக்கு ரூ. 5000) மற்றும் தினசரி வரம்பு ரூ. 1 லட்சம்.
3) ஐசிஐசிஐ வங்கி: வங்கியின் யூபிஐ டிரான்ஸாக்ஷன் வரம்பு மற்றும் வங்கியின் தினசரி வரம்பு இரண்டும் ரூ.10,000 (GPay பயனர்களுக்கு ரூ.25,000).
4) ஆக்சிஸ் வங்கி: வங்கியின் யூபிஐ டிரான்ஸாக்ஷன் வரம்பு மற்றும் வங்கியின் தினசரி வரம்பு ரூ. 1 லட்சம்.
5) பேங்க் ஆஃப் பரோடா: வங்கியின் யூபிஐ டிரான்ஸாக்ஷன் வரம்பு ரூ. 25,000.
நீங்கள் ஒரு நபரிடமிருந்து கூகுள் பே மூலமாக ரூ.2000 கேட்க பின்வரும் படிகளை பின்பற்ற வேண்டும்.
1) கூகுள் பே செயலியை திறக்க வேண்டும்.
2) திரையின் அடிப்பகுதியில் இருந்து, மேலே ஸ்வைப் செய்ய வேண்டும்.
3) நீங்கள் பணம் கேட்க விரும்பும் நபரின் புகைப்படத்தைத் தட்டவும்.
4) அந்த நபரின் பெயர், மொபைல் எண், கணக்கு எண் அல்லது யூபிஐ ஐடி ஆகியவற்றையும் நீங்கள் தேடலாம்.
5) கீழே, கோரிக்கை என்பதைத் தட்ட வேண்டும்.
6) தொகை மற்றும் விளக்கத்தை உள்ளிட வேண்டும்.
7) இப்போது கோரிக்கையைத் தட்டவும்.
8) இப்போது உங்கள் கோரிக்கையை மற்றவர் ஏற்றாலோ அல்லது நிராகரித்தாலோ கூகுள் பே-ல் உங்களுக்கு அறிவிப்பு வரும்.
மேலும் படிக்க | ரூ.500-க்குள் கிடைக்கும் ஜியோவின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ