மார்ச் 31க்கு முன் இதைச் செய்தால் வருமான வரியைச் சேமிக்கலாம்

Tax Saving Tips : இப்பணியை இம்மாத இறுதிக்குள் செய்து முடித்தால், வருமான வரி தாக்கல் செய்யும் போதே பயன்பெறலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 15, 2023, 02:14 PM IST
  • வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் தேதி நெருங்கி வருகிறது.
  • வருமான வரி தாக்கல் ஏப்ரல் முதல் தொடங்குகிறது
  • முதலீட்டில் விலக்கு பெறலாம்.
மார்ச் 31க்கு முன் இதைச் செய்தால் வருமான வரியைச் சேமிக்கலாம் title=

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் தேதி நெருங்கி வருகிறது. ஏப்ரல் முதல் வருமான வரி தாக்கல் தொடங்கும். வரி செலுத்துவோர் 2022-23 ஆம் ஆண்டிற்கான வரிகளை தாக்கல் செய்ய முடியும். இந்த நிதியாண்டில் செய்யப்படும் முதலீடுகளுக்கு விலக்கு பெறலாம். இருப்பினும், ஒரு முக்கியமான விஷயத்தை மார்ச் மாதத்திலேயே முடிக்க வேண்டும். இப்பணியை இம்மாத இறுதிக்குள் செய்து முடித்தால், வருமான வரி தாக்கல் செய்யும் போது நீங்கள் பல வித பலனை பெற்றுக்கொள்ள முடியும்.

மார்ச் 31க்குள் இந்தப் பணியை முடிக்கவும்
நடப்பு நிதியாண்டு மார்ச் 31, 2023 அன்று முடிவடைகிறது. வரி செலுத்துவோர் அடுத்த நிதியாண்டில் முதலீடு செய்ய தயாராக உள்ளனர். எதிர்கால வரி திட்டமிடல் இங்கே மிகவும் முக்கியமானது. சில எளிய நடைமுறைகளை இம்மாத இறுதிக்குள் செய்து முடிப்பதன் மூலம் வரியைச் சேமிக்க முடியும்.

மேலும் படிக்க | PPFல் முதலீடு செய்தீர்களா? உங்களுக்கான பெரிய அப்டேட் இதோ

வரி விலக்குகளின் நன்மை
2022-23 ஆம் நிதியாண்டு முடிவடைவதால், வரி செலுத்துவோர் வரிச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கான நேரமும் ஓடிக்கொண்டிருக்கிறது. முதலீடு செய்வது போன்ற சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், பெருமளவு பணத்தைச் சேமிக்க முடியும் என்பதை இங்கே கவனிக்க வேண்டும். இதைப் பயன்படுத்திக் கொள்ள, சில திட்டங்களில் முன்கூட்டியே முதலீடு செய்வது அவசியம்.

வருமான வரியைச் சேமிக்க எளிதான வழி
இந்த ஆண்டு வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது வரி விலக்கு பெற மார்ச் 31, 2023க்கு முன் முதலீடு செய்ய வேண்டும். பின்னர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது முதலீட்டு ஆவணத்தை காட்டலாம். முதலீட்டு அடிப்படையில் வரியைச் சேமிக்கலாம். அரசின் இந்த ஒரு திட்டத்தில் முதலீடு செய்தால் லட்சக்கணக்கான ரூபாய் சேமிக்க முடியும்.

தேசிய ஓய்வூதியத் திட்டம்
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்வது வரியைச் சேமிக்க மற்றொரு சிறந்த வழியாகும். வரி செலுத்துவோர் பிரிவு 80C இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரம்பை தவிர்த்து ரூ.50,000 வரை விலக்கு கோரலாம். இத்தகைய சூழ்நிலையில் இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் வரியை மிச்சப்படுத்த முடியும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி, டிஏ அரியர் கிடைக்காது!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News