UPSC Recruitment 2020: நீங்கள் அரசு வேலைக்குத் தயாராகி வருகிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) 204 பதவிகளில் ஆட்சேர்ப்பு செய்ய தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை கோரியுள்ளது. Grade-3 உதவி பேராசிரியர் (Assistant Professor), லைவ் ஸ்டாக் அலுவலர் மற்றும் உதவி பொறியாளர் ஆகிய பதவிகளுக்கு இந்த ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆட்சேர்ப்புக்கு ஆன்லைன் விண்ணப்பத்தை (Online Application) அனுப்பும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 2020 அக்டோபர் 1 ஆகும். UPSC-ன் இந்த ஆட்சேர்ப்பில் விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் upc.gov.in க்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு, ஆட்சேர்ப்புக்காக கொடுக்கப்பட்டுள்ள விளம்பரத்தக் காணலாம்.


ALSO READ: SAIL Recruitment 2020: SAIL இல் பணிபுரிய சிறந்த வாய்ப்பு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு...


இந்த பதவிகளில் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளது


கால்நடை அலுவலருக்கான மூன்று காலி இடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடக்கவுள்ளது.


தகுதி: - கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையில் பட்டம் பெற்றிருப்பது அவசியம். விலங்குகளின் ஆரோக்கியம் அல்லது அது தொடர்புடைய துறையில் மூன்று வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


Specialist Grade 3- உதவி பேராசிரியர் (மயக்கவியல்) - 63 காலி இடங்கள்


Specialist Grade 3- உதவி பேராசிரியர் (தொற்றுநோய்) - 1 காலி இடம்


Specialist Grade 3- உதவி பேராசிரியர் (அறுவை சிகிச்சை) - 54 காலி இடங்கள்


Specialist Grade 3- உதவி பேராசிரியர் (நுண்ணுயிரியல் அல்லது பாக்டீரியாலஜி) - 15 காலி இடங்கள்


Specialist Grade 3- உதவி பேராசிரியர் (நெப்ராலஜி) -  12 காலி இடங்கள்


Specialist Grade 3- உதவி பேராசிரியர் (நோயியல்) - 17 காலி இடங்கள்


Specialist Grade 3- உதவி பேராசிரியர் (குழந்தை நெப்ராலஜி) - 3 காலி இடங்கள்


Specialist Grade 3- உதவி பேராசிரியர் (மருந்தியல்)- 11 காலி இடங்கள்


விண்ணப்பிப்பதற்கான தகுதி


உதவி பேராசிரியருக்கான அனைத்து பதவிகளுக்கும், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து MBBS பட்டம் மற்றும் மூன்று ஆண்டு கற்பித்தல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


ஆட்சேர்ப்பு பற்றிய கூடுதல் தகவலுக்கு, இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பை இங்கே காணலாம்:


https://upsc.gov.in/sites/default/files/Advt-No-10_2020-Engl.pdf


உதவி இயக்குநர் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள்- 25 காலி இடங்கள்


உதவி பொறியாளர் - 1 காலி இடம்


தகுதி – டிரில்லிங் அல்லது மைனிங் அல்லது மெகானிகல் அல்லது சிவில் பொறியியல் பட்டம். மூன்று வருட பணி அனுபவம் இருப்பதும் முக்கியம்.


ALSO READ: அமெரிக்காவில் பணிபுரியும் மக்கள் மீது நெருக்கடி, பணிநீக்கம் அறிவித்த பல நிறுவனங்கள்