நம்மையும், நமது முகத்தையும் அழகுப்படுத்திக்காெள்ள பல அழகு சாதன பொருட்கள் இருக்கின்றன. முகத்திற்கு மேக்-அப் போட பிடிக்காத பலர் கண்களுக்கு மட்டும் மேக்-அப் போடுவர். ஐ-மேக் அப்பிற்கு ஐலைனர், ஐ ஷேடோ, மஸ்காரா, மை, ஐப்ரோ பென்சில், ஐலேஷஸ் ஆகியவை உபயோகப்படுத்தப்படும். இவை அனைத்தையும் ஒரு சிலர் தினசரி உபயோகிக்கின்றனர். இதனால், கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இது உண்மையா? ஐ-மேக் அப்பால் கண்களில் ஏற்படும் பாதிப்பை நிவரத்தி செய்வது எப்படி? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூன்று மாதங்களுக்கு பின்னர் மேக்-அப்பை உபயோகிக்க வேண்டாம்:


நாம், நமக்கு பிடித்த ஏதேனும் ஒரு கலர் ஐஷேடோ, ஐலைனர் அல்லது மஸ்காரா ஆகியவற்றை வாங்கும் போது அது நமக்கு பிடித்து விட்டால் அதை மாற்ற பல நாட்கள் எடுக்கும். ஆதலால், எந்த ஐ மேக் அப் பொருட்களைஉம் மூன்று மாதங்களுக்கு மேல் உபயோகிக்க வேண்டாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பழைய மஸ்காரா அல்லது ஐலைனரை உபயோகிப்பதால் இதில் உள்ள பாக்டீரியாக்கல் கண்களை பாதிக்குமாம். இது நேரடியாக கண்களில் படுவதால், கண் நோய் பாதிப்புகளுக்கும் வழி வகுக்கும். இதை மூன்று மாதங்களில் தூக்கிப்போட, அந்த பொருளில் மார்கரை வைத்து எழுதவும். அல்லது ஏதேனும் லேபிலையும் உபயோகிக்கலாம். 


படித்து விட்டு வாங்குங்கள்:


உங்கள் கண்களுக்கு அல்லது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் ஏதேனும் அந்த மேக் அப் பொருளில் இருக்கிறதா இல்லையா என்பதை பார்த்து, படித்துவிட்டு வாங்குங்கள். ஒரு சில நாடுகளில் உபயோகிப்படுத்தும் பொருட்களில் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான பொருட்கள் உபயோகப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஒரு சில பொருட்களால் சரும புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. 


மேலும் படிக்க | தலையில் அதிக பொடுகு பிரச்சனையா? சரி செய்ய எளிய வீட்டு வைத்தியம்!


கண் இமைகளில் மேக்-அப் வேண்டாம்!


ஒரு சிலர், ஐலைனரை ஐ லேஷசில் உபயோபிப்பர். இதை வாட்டர் லைனிங் என்று கூறுகின்றனர். இது, நம் கண்களில் உள்ள கார்னியா என்ற பகுதியை பாதிக்கும் என கூறப்படுகிறது. அப்படி கண் இமைகளில் நீங்கள் ஐ லனரை வைத்தால் கண்டிப்பாக 2 மணி நேரத்திற்கு பிறகு அதை நீக்கி விடவும். 


க்ளிட்டர் உபயோகிக்க வேண்டாம்:


சிலர் கண்களிl க்ளிட்டர் மேக் அப் போடுவர். இது, உங்களது கண்களை ஜிகுஜிகுவென காண்பிக்க உதவும். ஆனால், இது போன்ற அழகு சாதன பொருளை தேர்ந்தெடுக்கையில், சரியாக வாங்காவிட்டால் அது உங்கள் கண்களை பாதிக்க உதவும். இந்த படிமங்கள் உங்கள் கண்களில் பறந்தால் அது கண்களை பெரிய அளவில் பாதித்து விடும். 


கண்களில் மேக்-அப் படிந்தால் என்ன செய்வது?


>கண்களை டேப்பில் தண்ணீர் ஓட விட்டு கழுவவும். அல்லது கண்களை கழுவுவதற்கு என்று சில ரசாயனங்கள் உள்ளது. அதை பயன்படுத்தவும். 


>ஐ ட்ராப் உபயோகித்து கண்களை கழுவவும். 


>லென்ஸ் உபயோகிப்பவராக இருந்தால் அதற்கான க்ளீனிங் ரசாயனத்தை வைத்து சுத்தப்படுத்தவும். 


மேலும் படிக்க | மேக்-அப் போடாமலேயே கவர்ச்சிகரமாக மாறலாம்! எப்படி தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ