மேக்-அப் போடாமலேயே கவர்ச்சிகரமாக மாறலாம்! எப்படி தெரியுமா?

Tips To Become Attractive: கவர்ச்சிகரமாக இருப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இப்படி, பலருக்கும் உங்களுக்கும் பிடித்தது போல கவர்ச்சிகரமாக மாறுவது எப்படி?   

Written by - Yuvashree | Last Updated : Jan 18, 2024, 04:48 PM IST
  • மேக்-அப் போடாமல் கவர்ச்சிகரமாக இருக்கலாம்.
  • தைரியத்தையும் தன்னம்பிக்கையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
  • இன்னும் சில டிப்ஸ் இதோ.
மேக்-அப் போடாமலேயே கவர்ச்சிகரமாக மாறலாம்! எப்படி தெரியுமா?  title=

‘அழகாக இருப்பவர்களுக்கு அறிவு தேவையில்லை, அறிவுடன் இருப்பவர்களுக்கு அழகு தேவையில்லை’ என்று பேச்சு வழக்கில் பலர் கூறுவதுண்டு. ஆனால், இது யாரோ குறைந்த சிந்தனை உடைவர்கள் கூறிய பொருள் இல்லாத கருத்தாக பலரால் பார்க்கப்படுகிறது. அழகாக இருப்பவர்கள் கவர்ச்சிகரமாக இருப்பார்கள் என்று கூறிவிட முடியாது. அழகு-அறிவு இது இரண்டும் இருந்தால்தான் கவர்ச்சிகரமான மனிதராக ஒருவர் மாற முடியும். இதனால் தன்னம்பிக்கை மலருவது, தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான வாழ்க்கையும் மேம்படும். அப்படி, பிறரை ஈர்க்க மட்டுமன்றி, நம்மை நமக்கே அதிகம் பிடிக்க வைக்க இந்த கவர்ச்சிகரம் உதவும். அதை வளர்க்க சில ஈசி டிப்ஸ் இதோ. 

புது விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்:

ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள பள்ளி-கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர்களை உற்று நோக்கினால் அவர்கள் ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ள தயங்காமல் இருப்பர். புது விஷயங்களை படிக்க, புத்தகங்கள் படிப்பது மட்டுமன்றி புது மனிதர்களை சந்தித்து புது அனுபவங்களையும் பெற்றுக்கொள்ளலாம். மனதை திறந்து வைத்திருந்தாலே, நம்மால் நம்மை சுற்றி இருக்கும் அனைத்து விஷயங்களை உற்று நோக்கி கற்றுக்கொள்ள முடியும். இதை நீங்கள் பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் போது, உங்களையே அறியாமல் நீங்கள் பிறரால் ஈர்க்கப்படுவீர்கள். 

மேலும் படிக்க | தலையில் அதிக பொடுகு பிரச்சனையா? சரி செய்ய எளிய வீட்டு வைத்தியம்!

கண்ணோடு கண் பார்ப்பது:

நேர்காணலில் இருந்து, நேர்மையான உரையாடல்கள் வரை எதுவாக இருந்தாலும் யாரிடம் பேசினாலும் அவர்களுடன் கண்ணோடு கண் பார்த்து பேச வேண்டும். இப்படி, பேசுவதால் உங்களின் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறருக்கு தெரிய வரும். இதனால் நீங்கள் உற்று கவனிக்கிறீர்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும். இதனால் உங்கள் மீது மதிப்பு உயர்ந்து நீங்கள் அவர்களுஇக்கு கவர்ச்சிகரமான மனிதராக தெரிவீர்கள். 

நேர்த்தி:

நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும் என்று பலர் கூற கேள்விப்பட்டிருப்போம். நிமிர்ந்து நடப்பது, நேராக பார்ப்பது ஒருவரை ஈர்க்க மட்டுமன்றி, நமக்கே தைரியமாக உணர வைக்க உதவும். மேலும், இது நம்மிடம் ஒருவர் பேசுவதற்கு முன்னாலேயே நம்மை குறித்து நல்ல எண்ணத்தை அவர்களின் மனதில் விதைத்து விடும். ஆகையால், நடக்கும் போதும், பேசும் போதும் உட்காரும் போதும் நேர்த்தியுடன் செயல்பட வேண்டும். 

பேசும் தன்மை:

செய்யும் செயல்களிலும் பேசும் வார்த்தையிலும் தெளிவு இருக்க வேண்டும் என்று பலர் யோசிப்பதுண்டு. ஆனால், அதை நடைமுறை படுத்தும் போது கண்டிப்பாக தடுமாற செய்வோம். நாம் பேசுவது நமக்கு முதலில் புரிகிறதா என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது பேச்சை கேட்பவர்களுக்கும் நாம் பேசுவது பிடிக்கும். அதை கேட்கவும் செய்வார்கள். அதனால் பேசுவதில் நிதானம் இருக்க வேண்டும். பொறுமையுடன் பேச வேண்டும். 

மேலும் படிக்க | LPG Cylinder: வெறும் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் பெறலாம், எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News