உத்தரகண்ட் இன்று புதிய முதலமைச்சரைப் பெறுகிறது; ஒரு நாள் முதல்வராக ஷிருஷ்டி!!
தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராக கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி பதவியேற்கவுள்ளார்..!
தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராக கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி பதவியேற்கவுள்ளார்..!
தேசிய பெண் குழந்தை தினத்தை (National Girl's Day) முன்னிட்டு, ஹரித்வாரைச் சேர்ந்த இளம் பெண் ஷிருஷ்டி கோஸ்வாமி (Srishti Goswami), BJP ஆட்சி செய்யும் உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக இன்று செயல்பட உள்ளார். அவர் டேராடூனில் நடைபெறும் குழந்தை சட்டசபை அமர்வில் பங்கேற்பார். இந்தியாவின் பல பகுதிகளில், சாதனை புரியும் சிறுவர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒரு நாள் கலெக்டர், MP போன்ற பதவிகளில் உட்காரவைக்கப்பட்டு கௌரவிப்பது வழக்கமாக நடக்கும் ஒன்று தான். ஆனால், ஒரு நாள் முதல்வராக யாரும் இதுவரை இருந்ததில்லை.
இந்நிலையில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று, உத்தரகண்டில் இளம் பெண் ஷிருஷ்டி கோஸ்வாமிக்கு இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. ஹரித்வார் மாவட்டத்தின் (Haridwar district) தவுலத்பூர் கிராமத்தில் வசிக்கும் ஷிருஷ்டி கோஸ்வாமி B.Sc Agriculture படித்து வருகிறார். அவரது தந்தை கிராமத்தில் ஒரு சிறிய கடை நடத்தி வருகிறார். அவரது தாயார் அங்கன்வாடி தொழிலாளி. 19 வயதான அவர் 2018-ல் உத்தரகண்ட் சிறுவர்கள் சட்டசபையின் முதல்வராக இருந்தார். மேலும், 2019 ஆம் ஆண்டில், பெண்கள் சர்வதேச தலைமைத்துவத்தில் பங்கேற்க ஷிருஷ்டி கோஸ்வாமி தாய்லாந்து சென்றார்.
இது குறித்து சிருஷ்டி கூறுகையில்., இதை என்னால் நம்பவே முடியவில்லை. வாழ்நாளில் யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பை பெற்றுள்ளேன். இளைஞர்கள் மிகச் சிறந்த முறையில் செயல்பட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் எனது செயல்பாடுகள் இருக்கும் என்றார். இந்த ஒரு நாளில் அவர் அடல் ஆயுஷ்மான் திட்டம் (Atal Ayushman Scheme), ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட அரசின் வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்கிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இவர் உத்தரகண்ட் மாநிலத்தின் சிறுவர்களுக்கான சட்டசபையில் முதல்வராக இருந்து வருகிறார்.
ALSO READ | அடுத்த வாரம் முதல் 5-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்!
அவர் ஒரு நாள் முதல்வராக பதவியேற்கும் முன்னர் அதிகாரிகள் அவருக்கு அரசின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கவுள்ளார்கள். இதற்கான கடிதத்தை உத்தரகண்ட் குழந்தைள் உரிமை பாதுகாப்பு ஆணையம், மாநிலத்தின் முதன்மை செயலாளருக்கு எழுதியிருந்தது. ஷங்கர் இயக்கத்தில் முதல்வன் என்ற படத்தில் இதுபோன்ற ஒரு நாள் முதல்வர் கான்செப்ட் இருந்திருக்கிறது.
ரகுவரன் முதல்வராக பதவியில் இருப்பார். அவரிடம் நிருபராக பேட்டி எடுக்கும் அர்ஜூன், ரகுவரனை கேள்விக் கணைகளால் தொடுப்பார். உடனே ரகுவரன், ஒரு நாள் முதல்வராக இருந்தால்தான் அந்த பதவியின் கஷ்டம் தெரியும் என்று கூற அர்ஜூனும் சிறிய யோசனைக்கு பிறகு ஒப்புக் கொள்வது போன்று காட்சிகள் நகரும்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR