Teddy Day 2023: காதலர் வாரத்தின் நான்காவது நாள் டெடி டேயாக கொண்டாடப்படுகிறது. காதலில் இருக்கும் தம்பதிகள் டெட்டி பியர் அல்லது பிற மென்மையான பொம்மைகளை கொடுத்து இந்த நாளை கொண்டாடுகிறார்கள். உங்களுடன் செலவழித்த பொன்னான தருணங்களையும் நேரத்தையும் அவர்களுக்கு நினைவூட்டும் என்ற நம்பிக்கையுடன் மென்மையான உரோமம் கொண்ட கரடி பொம்மையை வாங்கி அதைத் தங்கள் அன்புக்குரியவருக்குப் பரிசளிக்கிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிப்ரவரி 10, உலக டெடி தினம். காதலர் வாரத்தின் நான்காவது நாள். பிப்ரவரி-14ம் தேதி காதலர் தினம் என்றால், பிப்ரவரி-7ம் தேதி முதல் கொண்டாடப்படும் காதலர் வாரத்தின் 7 நாட்கள் இவை...


பிப்ரவரி 7 - ரோஜா தினம்.
பிப்ரவரி 8 - முன்மொழியும் நாள்.
பிப்ரவரி 9 - சாக்லேட் தினம்.
பிப்ரவரி 10 - டெடி டே.
பிப்ரவரி 11 - வாக்குறுதி நாள்.
பிப்ரவரி 12 - கட்டிப்பிடி நாள்.
பிப்ரவரி 13 - முத்த நாள்.
பிப்ரவரி 14 - காதலர் தினம்.


மேலும் படிக்க | Chocolate Day 2023: காதலுக்கு மட்டுமல்ல அன்பான உறவுகளுக்கும் சாக்லெட் தின வாழ்த்துகள்


சரி, காதலர்களுக்கும் டெடி பியருக்கும் என்ன தொடர்பு? எப்படி காதலர் வாரத்தின் ஒரு நாளாக டெட்டி பியர் தினம் அனுசரிக்கப்படுகிறது என்று தெரியுமா? டெடியின் கதை அமெரிக்காவில் உருவானது. 


டெடி பியருக்கும் அன்புக்கும் தொடர்பு


அமெரிக்காவில், மிசிசிப்பி மற்றும் லூசியானா இடையே எல்லை தகராறு உச்சத்தில் இருந்தபோது. அந்நாட்டு அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் இந்த மோதலைத் தீர்ப்பதற்காக மிசிசிப்பிக்கு சென்றார். அப்போது, அங்கு அவர் மிசிசிப்பி காட்டுக்குச் சென்றார்.


காட்டில் காலாற நடந்துக் கொண்டிருந்த ரூஸ்வெல்ட், காயமடைந்த கரடியைப் பார்த்தார். அந்தக். கரடி மரத்தில் கட்டப்பட்டிருந்தது. அந்தக் கரடியை மரத்தில் இருந்து அவர் விடுவித்தாலும், அதன் காயங்களால், அதுபடும் வேதனையில் இருந்து அதற்குக் விடுதலை அளிப்பதற்காக, அதை சுட உத்தரவிட்டார்.


இந்த கருணைக்கொலை சம்பவம் அமெரிக்கா முழுவதும் பரவலாக சர்ச்சைக்குக்ள்ளானது. இந்த விவகாரம் தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரைகளில், ஒன்றில் கார்ட்டூனிஸ்ட் பெர்ரிமேன் உருவாக்கிய கரடியின் கார்ட்டூன் மக்களின் மனம் கவர்ந்தது.  


உலகின் முதல் டெடி 


இந்த கார்ட்டூன் உருவ சித்தர்ப்பு, பொம்மைக் கடை வைத்திருக்கும் மோரிஸ் மிட்சோம் என்பவருக்கு மிகவும் பிடித்தப்போனது. அதை ஒரு பொம்மையாக உருவாக்கிய அவர் அதற்கு ரூஸ்வெல்டின் செல்லப்பெயரான ‘டெடி’ என்ற பெயருடன், கரடியின் ஆங்கிலப் பெயரான ‘பியர்’ என்பதையும் இணைத்து ‘டெடி பியர்’ என்று அழைத்தார்.


மேலும் படிக்க | Valentine's Day 2023: காதலர் தினத்தன்று கொடுக்க வேண்டிய 5 சாக்லேட்டுகள்!


இந்த பொம்மைக்கு டெடி பியர் என்று பெயர் வைத்து சந்தைப்படுத்துவதற்கு ஒரிஜினல் ‘டெடி’ ரூஸ்வெட்டிடம் அனுமதி பெற்றுவிட்டார்கல். அப்போதிருந்து, இந்த பெயர் பிரபலமானது. மோரிஸ் மிட்சோம் தயாரித்த உலகின் முதல் டெடி பியர், இன்னும் இங்கிலாந்தின் பீட்டர்ஃபீல்டில் பாதுகாக்கப்படுகிறது. 1984ஆம் ஆண்டில் தான், முதல் டெடி பியர் உருவாக்கப்பட்டது. 


ஹேப்பி டெடி டே 2023: வாழ்த்துகள், வாட்ஸ்அப் செய்திகள், மேற்கோள்கள்
என் வாழ்க்கையின் அன்பே! நீங்கள் என் சிறந்த நண்பர் என்பதை வெளிப்படுத்த விரும்புகிறேன். ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு நாளும் உன்னை நினைக்கிறேன். ஹேப்பி டெடி டே.


ஒவ்வொரு முறை நான் கட்டிப்பிடிக்கும் போதும் என் டெடி உன்னை நினைவூட்டுகிறது. இது உங்களைப் போலவே மென்மையாகவும் சூடாகவும் இருக்கிறது. என் அன்பருக்கு டெடி தின வாழ்த்துக்கள் 


நிஜ வாழ்க்கை டெடி பியருக்கு மிகவும் மகிழ்ச்சியான டெடி டே வாழ்த்துக்கள்.  


மேலும் படிக்க | யாரின் காதலுக்கு ஜே? காதலை இன்று சொல்லாதீர்கள்! Propose Day எச்சரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ