யாரின் காதலுக்கு ஜே? காதலை இன்று சொல்லாதீர்கள்! Propose Day எச்சரிக்கை

Propose Day 2023 Astrology: பிப்ரவரி 8 காதலை முன்மொழியும் நாள் ஜோதிட கணிப்பு உங்கள் ராசிக்கு என்ன சொல்கிறது? யார் இன்று காதலை முன்மொழியலாம்! யார் அடக்கி வாசிக்க வேண்டும்? இந்த ராசிக்காரர்கள் அமைதியாக இருந்தாலே காதல் ஜெயிக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 8, 2023, 12:26 PM IST
  • கண்டிப்பாக இன்னைக்கு லவ்வர்கிட்ட ஜொல்லு விடாதீங்க
  • காதலை வெளிப்படுத்த சிறந்த நாள் இன்று
  • ஆனால் இந்த ராசிக்காரர்கள் அமைதியாக இருந்தாலே காதல் ஜெயிக்கும்
யாரின் காதலுக்கு ஜே? காதலை இன்று சொல்லாதீர்கள்! Propose Day எச்சரிக்கை title=

பிப்ரவரி 8 காதலை முன்மொழியும் நாள்: காதலை முன்மொழியும் நாளான இன்று (2023 பிப்ரவரி 8) எந்த ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும், முன்மொழியும் காதல் கைகூடுமா? உங்கள் காதல் ராசி என்ன சொல்கிறது? இன்று சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். காதல் வாழ்க்கையில் வெற்றி உண்டாகும். கணவன்-மனைவி இடையே உறவு வலுப்பெறும். சில ராசிக்காரர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்துவார்கள். அனைத்து 12 ராசிகளின் காதல் ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்...
 
பிப்ரவரி 8 காதலை முன்மொழியும் நாள் ஜோதிட கணிப்பு

காதலர் வாரம் நேற்று முதல் அதாவது பிப்ரவரி 7 முதல் தொடங்கியது. நேற்று ரோஜா தினம், இன்று முன்மொழிதல் தினம். சில ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். காதல் வாழ்க்கையில் வெற்றி உண்டாகும். கணவன்-மனைவி இடையே உறவு வலுப்பெறும். சில ராசிக்காரர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்துவார்கள். அனைத்து 12 ராசிகளின் காதல் ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்...

மேஷம்
இன்று உங்கள் காதலுக்கு ஜே என்ன ஜே ஜே என சொல்லலாம். காதலர்கள், கணவன்-மனைவி இடையே உறவு வலுவடையும். உங்கள் உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்தலாம்.

ரிஷபம்
திருமணமானவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உங்கள் துணையிடம் இருந்து அதிக அன்பைப் பெறுவீர்கள். உங்கள் அன்பை வெளிப்படையாக வெளிப்படுத்துவீர்கள். அன்பை வெளிப்படுத்த இன்று மிகவும் சாதகமான நாள்.

மேலும் படிக்க | நல்ல காலம் பொறந்தாச்சு! 5 ராசிக்காரர்களில் வாழ்வு அமோகம்! பணமழையில் நனையலாம்

மிதுனம்
இன்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காதல் துணையுடன் சண்டை வரலாம். உங்கள் துணை ஏமாற்றுவதாக சிலர் நினைக்கலாம். உங்கள் அன்பை கவனமாக வெளிப்படுத்துங்கள்.

கடக ராசி
உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். இது அன்பை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முன்மொழிய இன்று நல்ல நாள். காதல் துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.

சிம்மம்
தனிமையில் இருப்பவர்களுக்கு இன்று மிகவும் சிறப்பாக இருக்கும். இன்று உங்கள் துணையை ஈர்க்க முயற்சி செய்வீர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

கன்னி
தனிமையில் உள்ளவர்கள் இன்று தங்கள் காதல் துணையைக் கண்டறியலாம். நீங்கள் ஒருவரிடன் உங்கள் காதலை முன்மொழிய நினைத்தால் இது அதற்கான நல்ல நேரம்.  காதல் எண்ணங்கள் அதிகரிக்கும் நாள் இது.

மேலும் படிக்க | சூரியன்-சனி சேர்க்கை: அடுத்த 30 நாட்களுக்கு இந்த ராசிகள் ராஜவாழ்க்கை வாழ்வார்கள்

துலாம்
நீண்ட நாட்களாக உறவில் இருப்பவர்கள் தங்கள் உறவை மேலும் கொண்டு செல்ல நினைக்கலாம். இன்று நீங்கள் உங்கள் காதல் துணையுடன் எங்காவது செல்லலாம். உங்கள் துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.

விருச்சிகம்
ஒரு துணையுடன் தவறான புரிதல் உங்கள் உறவைக் கெடுக்கும். இன்று மோசமடைந்து வரும் உறவை கையாளும் வாய்ப்பு கிடைக்கும். புத்திசாலித்தனமாக நடக்கவும். புதிய உறவைத் தொடங்க நல்ல நாள் அல்ல.

தனுசு
இன்று உங்கள் பங்குதாரர் உங்கள் மனநிலையை பிரகாசமாக்குவார். துணையுடன் எந்தவிதமான தர்க்கத்தையும் தவிர்க்கவும். திருமணமானவர்களுக்கிடையே ஏதாவது ஒரு விஷயத்துக்காக சண்டை வரலாம்.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்! இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக செயல்பட வேண்டும்! 

மகரம்
உங்கள் துணையுடன் ஏதாவது ஒரு விஷயத்திற்காக மனத்தாங்கலில் இருந்தால், அதை இன்று தீர்த்துக்கொள்ள சிறந்த நாள். புதிய துணைக்கான தேடல் இன்றுடன் முடிவடையும்.

கும்பம்
இன்று உங்கள் காதல் வாழ்க்கையில் மூன்றாவது நபர் நுழையலாம். இதன் காரணமாக உங்கள் உறவு மோசமடையலாம். பொறாமையால் கணவன்-மனைவி இடையே மனக்கசப்பு ஏற்படும் என்பதால் வார்த்தைகளை கவனமாகக் கையாளவும்.  

மீனம்
திருமணமாகாதவர்களுக்கு திருமண யோசனை வரலாம். அன்பை வெளிப்படுத்த இன்று நல்ல நாள். இந்த நாளில் தொடங்கப்பட்ட உறவு நீண்ட காலம் நீடிக்கும்.

மேலும் படிக்க | மாசி மாத ராசிபலன்கள்! மேஷத்திற்கு மகுடம் சூட்டும் கும்ப ராசியில் சூரிய சஞ்சாரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News