காதலர் தினம் என்பது பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் காதல் மாதம், காதலர் வாரம் என பல வகைகளிலும் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன .ஒவ்வொரு முறையும் இந்த தினம் வரும் பொழுது இந்த காலாச்சாரம் எப்படி எந்த நாட்டில் தோன்றியது? ஏன் பிப்ரவரி 14-யை வேலண்டைன்ஸ் டே என்று அழைக்கிறார்கள்? காதலர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? யார் அந்த வேலண்டைன்? அவருக்கும் காதலர்களுக்கும் என்ன சம்பந்தம்? போன்ற பல கேள்விகளுக்கான விடைகளை தெரிந்து கொள்வோம்

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காதலர் தின தோற்றதிற்கு சில வரலாற்று நிகழ்வுகள் காரணமாக சொல்லப்படுகிறது.


1.வேலண்டைன் என்பவர் யார்? 


கிபி 270-ஆம் ஆண்டு கால கட்டத்தில் ஆட்சியில் இருந்த ரோம் மன்னர் இரண்டாம் கிளாடியஸ் போர்வீரர்கள் திருமணம் செய்து கொண்டால் வீரம் மிகுந்தவராக இருக்க முடியாது என்றும் , பெண்களுடன் போர் வீரர்கள் சேர்ந்து வாழாமல் இருந்தால் மட்டுமே அதிக சுறுசுறுப்பாகவும் தெளிவாகவும் இருப்பதாக நினைத்து அனைவரையும் பிரித்து வைத்தாராம். இதனால் மன்னர் அது படையில் சேர மக்கள் பலரும் தயங்கினார்கள். ஒரு நாள் மொத்தமாக எந்த ஒரு ஆணும் இனி திருமணமே செய்யக்கூடாது என்று ஆணையை பிறப்பித்தாராம் மன்னர் கிளாடியஸ். இதனால் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்து செய்யப்பட்டன.


மேலும் படிக்க | வாவ்..ரயில் பயணிகளுக்காக புதிய சேவையா? கட்டாயம் தெரிஞ்சிகோங்க 


அப்போது வேலண்டைன் என்னும் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் ஆண்களுக்கு அவர்கள் விரும்பும் பெண்ணோடு ரகசியத் திருமணம் செய்து வைத்தார். வேலண்டைன் செய்த காரியம் மன்னருக்கு தெரிய வர அவரை சிறையில் அடைத்து சித்திரவதை செய்து தலையை துண்டித்து கொன்றுவிட்டார் . 


வேலண்டைன் சிறையில் இருந்த கால கட்டத்தில் தன்னை பார்க்க வந்த ஜெயிலர் மகளை விரும்பி, அவருக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும் அக்கடிதத்தில், “ஃப்ரம் யுவர் வேலண்டைன் (from your valentine)” என்று எழுதி இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுவே காதலர் தினத்திற்கு முதன்மை காரணமாக இருக்கலாம் என நம்ப்படுகிறது. இதனாலே இது வேலண்டைன் டே என்று அழைக்கிறார்கள்.


2. லூபேர்களியா (Lupercalia) 


பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 15 வரை ரோமானியர்கள் லுபர்காலியா எனும் பண்டிகையை கொண்டாடினர். அதில், ஆண்கள் ஒரு நாயையும் ஆட்டையும் பலியிட்டு அதன் ரோமத்தால் திருமணமாகாத பெண்ணை அடிப்பார்கள். இது கருவுருதலை வலுப்படுத்தும் என்பதால் பெண்களும் அதை விருப்பப்பட்டு ஏற்றுக்கொண்டனர். பின்னர் ஒரு குவளையில் இருக்கும் பெண் பெயரை தேர்ந்தெடுத்து தங்களது காதலை வெளிப்படுத்துவர். சில சமயங்களில் இது திருமணமாக மாறும்.


காதலர் தின கொண்டாட்டங்கள்


ரோமன் மக்களின் பண்டிகைகளில் ஒன்றான இந்த பண்டிகை பிப்ரவரி மாதத்தின் நடுவில் கொண்டாடப்படுவதால் இது காதல் மாதமாகவே கடைபிடிக்கப்பட்டது.1500-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு காதலர் தின கொண்டாட்டங்களுக்கு அமெரிக்காவில் கடிதங்கள் முதன்முதலாக பகிரப்பட்டது. 1700-கள் அதற்கு மேல் வர்த்தக கவிதைகளுடன் பதிவு செய்யப்பட்ட கடிதங்கள் சந்தைக்கு வர ஆரம்பித்தன.


அதன் பிறகு யூரோப்பா மற்றும் ஆசியா என ஒவ்வொரு கண்டங்களாக இந்த கலாச்சாரம் பரவ ஆரம்பித்தது.காதலர்கள் தங்களின் காதலை பரிசுகள், ரோஜா, சாக்லேட் அல்லது மோதிரம் கொடுத்து வெளிப்படுத்துகின்றனர்.ஒரு புள்ளி விவரத்தின் படி 2012-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் 200 மில்லியன் ரோஜாப் பூக்கள் விற்பனையானது என்று சொல்லப்படுகிறது. 40 மில்லியன் ஹார்ட் ஷேப் சாக்லேட் பாக்ஸ்கள் விற்பனையாகியுள்ளதாகவும் கூறுகின்றனர். தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தை குறிவைத்து corporate நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சாக்லேட், ரோஜா போன்ற சிறு சிறு பொருள்களில் தொடங்கி தங்கம் வைரம் பிளாட்டினம் போன்ற பொருட்கள் வரை காதலர்களை குறி வைத்து சந்தைப்படுத்துதல் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.


மேலும் படிக்க | விரைவில் சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புக்கான தேர்வு நுழைவுச் சீட்டு! எப்படி பதிவிறக்கம் செய்வது? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ