பிப்ரவரி மாதம் என்றதுமே பலரது நினைவிற்கும் வருவது காதலர் தினம், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதியன்று உலக மக்களால் காதலர் தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  பொதுவாக பிப்ரவரி காதல் மாதம் என்று அழைக்கப்படுகிறது, ஆண்டு முழுவதும் காதலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் காதலை கொண்டாடும் நேரம்தான் காதலர் தினம்.  இந்த நாளில், ஒவ்வொருவரும் தங்கள் துணைக்கு பல சிறப்பான பரிசுகளை வழங்க விரும்புகிறார்கள், இதுபோன்று காதலர் தினத்தன்று கொடுக்கப்படும் பரிசுகள் சிறந்த நினைவுகளை கொடுக்கிறது.  இந்த அற்புதமான காதலர் தினத்தின் நமது காதலன்/காதலிக்கு நாம் கொடுக்கும் பரிசுகள் அவர்களுக்கு சந்தோஷத்தை தான் தர வேண்டுமே தவிர, அவர்களின் மகிழ்ச்சியை கெடுத்துவிடும் அளவில் இருந்துவிடக்கூடாது.  இப்போது காதலர் தினத்துக்கு தனது துணைக்கு எந்த மாதிரியான பரிசை கொடுக்கலாம் என யோசித்துக்கொண்டிருக்கும் நபர்களுக்காக இங்கே சில ஐடியாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Valentine Week 2023: அட! இதுக்கு தான் காதலர் தினம் கொண்டாடுறாங்களா?


ரோஸ் லேம்ப்:


உங்கள் காதல் வாழ்க்கையில் ஒளியை வைத்திருக்க, காதலர் தின நாளில் உங்கள் துணைக்கு ரோஸ் லேம்பை பரிசாக கொடுக்கலாம்.  இந்த ரோஸ் லேம்பில் சீல் செய்யப்பட்ட கண்ணடி ஜாடியில் எல்இடி ஒளியுடன் கூடிய ரோஜாப்பூ இருக்கும்.  பொதுவாக ரோஜா உங்கள் அன்பை வெளிப்படுத்தும் பொருளாக இருக்கும், அதில் உள்ள ஒளியானது உங்கள் உற்வில் ஒரு இனிமையை ஏற்படுத்தும்.  காதலர் தினத்தில் உங்கள் துணைக்கு பரிசளிக்க இதுவே சிறந்த பரிசாக இருக்கும்.


மோதிரம்:


பொதுவாக பெண்கள் மோதிரங்களை அதிகம் விரும்புவார்கள், உங்கள் காதலை வெளிப்படுத்த மோதிரம் ஒரு சிறந்த வழியாகும்.  இந்த நாளில் நீங்கள் உங்கள் துணைக்கு மோதிரத்தை பரிசாக அளித்து ஏழு ஜென்மங்கள் வரை உடன் இருப்பதாக உறுதியளிக்கலாம். 


வாசனை திரவியம் மற்றும் வாட்ச்:


வாசனை திரவியம் மற்றும் வாட்ச் காம்போ இரண்டும் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.  இந்த நாட்களில் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட்டில் விதவிதமான வாட்ச் மற்றும் வாசனை திரவியங்கள் விற்கப்படுகின்றன.  இதில் உங்கள் துணைக்கு பிடித்ததை வாங்கி கொடுக்கலாம்.


கேண்டில் லைட் டின்னர்:


இரவு நேரத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உங்கள் துணையுடன் உணவை சாப்பிடுவது பழமையான ஒன்றாக இருந்தாலும், இது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது.  இந்த நாளில் நீங்கள் உங்கள் துணையை மெழுகுவர்த்தி ஒளி இரவு உணவிற்கு அழைத்துச் செல்லலாம். 


மலர் கொத்து மற்றும் சாக்லேட்:


உங்கள் துணையிடம் உங்கள் அன்பை உணர வைக்க விரும்பினால், காதலர் தினத்தன்று, நீங்கள் அவர்களுக்கு பூக்கள் மற்றும் சாக்லேட்டுகளை பரிசாக வழங்கலாம்.  இது அவர் இதயத்தில் உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும்.  


காதலர் தினத்தில் தனது காதலனுக்கு என்ன பரிசு கொடுப்பது என்று பெண்கள் பெரும்பாலும் குழப்பமடைகிறார்கள்.  அப்படியானால், ஒரு நல்ல பெல்ட் அல்லது பர்ஸை கொடுப்பது உங்கள் காதலனை மகிழ்ச்சிப்படுத்தும்.  அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட்டில் காதலர் தினத்துக்காக பிரத்யேகமாக நிறைய பரிசுகள் களமிறங்கியுள்ளது, நீங்கள் ஆன்லைன் மூலமாக இதில் ஷாப்பிங் செய்து கொள்ளலாம்.


மேலும் படிக்க | Happy Rose Day 2023: இன்று இந்த கவிதைகளை அனுப்பி அசத்துங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ