Vaastu kitchen Big mistakes : அன்னலட்சுமி குடிகொள்ளும் சமையலறையை வைத்து ஒரு வீட்டில் செல்வத்தையும், மகிழ்ச்சியையும் சொல்லி விடலாம். அங்கிருந்து ஜாடிகள் எல்லாம் நிறைந்திருந்தால் அந்த குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது, பண பிரச்சனைகள் இல்லை, குடும்பத்திலும் கஷ்டம் இல்லை. அதுவே, சமையலறை சுத்தம் செய்யாமல், உப்பு, அரிசி ஜாடிகள் எல்லாம் காலியாக இருக்கிறது என்றால் அந்த குடும்பம் வறுமையில் இருக்கிறது என புரிந்து கொள்ளலாம். சில சமயங்களில் செல்வங்கள் இருந்தும் சில ஜாடிகளை நிரப்பாமல் வைத்திருப்போம். அதை தெரிந்தோ தெரியாமலோ கவனிக்காமல் விட்டிருப்போம். அப்படி செய்தால் வாஸ்துமுறைப்படி வறுமை இல்லையென்றாலும் வறுமை தேடி வந்துவிடும். ஆம், அரிசி, உப்பு ஜாடிகளை எப்போதும் காலியாக வைத்திருக்கவே கூடாது. எவ்ளவு கஷ்டம் இருந்தாலும் அந்த இரண்டையும் குறைவில்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அறிவுக்கார புள்ளைக்கு என்ன ஆச்சோ!! பிறர் பார்த்து பரிதாபப்படும் நிலைக்கு சில ராசிகளை தள்ளும் புதன் பெயர்ச்சி!


அன்னலட்சுமி அருள் கிடைக்கும்


அதேபோல் பருப்பு, புளியும் இப்போதும் சமையலறையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அந்த வீட்டில் உணவுக்கு பஞ்சமிருக்காது. பசி தாண்டவமாடாது. செல்வமும் அதிகம் சீக்கிரம் சேரும். இதை யாரெல்லாம் கடைபிடிக்கிறார்களோ அவர்களுக்கு மகாலட்சுமியின் அருள் தானாகே கிடைக்கும். பணம் செல்வத்தை உயர்த்தும் என்றாலும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வீட்டில் இருந்தால் தான் செல்வம் கூட வீட்டில் தங்கும். இந்த விஷயங்களில் பெண்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் இந்த விஷயத்தில் கவனக்குறைவாக இருக்கமாட்டார்கள்.


எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டிய பொருட்கள்


ஆனால், பெண்கள் பலரும் செய்யும் தவறு அரிவாள்மனை மற்றும் கத்தியை சுத்தம் செய்வதில் தான். காய்கறிகள் அறிந்து வைத்துவிட்டு அதனை அப்படியே கழுவாமல் வைத்துவிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. அப்படி செய்யவே கூடாது. அது உங்களுக்கு நோய்நொடிகளை கொண்டு வந்து, வறுமையையும் ஏற்படுத்திவிட்டு செல்லும். இந்த பழக்கம் இருப்பவர்கள் உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். எப்போது அவற்றை பயன்படுத்தினாலும் உடனடியாக அதனை சுத்தம் செய்வதை பழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள். அரிவாள்மனை, கத்தி சமையலறையில் சுத்தமாக இருக்க வேண்டும். 


சமையலறையில் கூடாத பொருட்கள்


பெண்கள் சமையலறையில் கவனம் செலுத்த வேண்டிய அடுத்த முக்கியமான விஷயம் உடைந்த பொருட்களை வைத்திருக்கக்கூடாது. எந்த பொருள் உடைந்திருந்தாலும் அதனை உடனே அப்புறப்படுத்திவிட வேண்டும். குப்பைகள் ஒருநாளுக்கு மேல் சமையலறையில் இருக்கவே கூடாது, தண்ணீர் குழாய்கள் உள்ளிட்ட இடங்கள் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அன்னலட்சுமி குடிகொள்ளும் சமையலறை எப்போதும் தூய்மையாக இருக்கும்பட்சத்தில் வீடும் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்களும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்ளாத வரை இதெல்லாம் ஒரு விஷயமா என அசால்டாக நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.


மகிழ்ச்சியை கொடுக்கும் வாஸ்து


காலப்போக்கில் பிரச்சனைகள் அதிகரிக்கும்போது தான் இதை நாம் செய்திருக்கலாமோ என நினைத்து வருத்தப்படுவீர்கள். மகிழ்ச்சியும், செல்வமும் பெருகுவது பெண்களாகிய உங்கள் கைகளில் தான் இருக்கிறது. வாஸ்து முறைகள் என்பதை விட ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுத்தம் அவசியம். சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாமே சுத்தமாக இருக்கவும், நல்ல விஷயங்களை செய்யவுமே வலியுறுத்துகின்றன. சின்ன விஷயம் என அசால்டாக இருக்கும்போது தான் பெரிய பிரச்சனைகள் வந்துவிடுகின்றன. சமையலறை தான் வீட்டின் செல்வத்தை மட்டும் அல்ல, ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் மருத்துவமனை. எனவே, அங்கு எப்போதும் கவனமாக இருப்பது ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் ஆரோக்கியமான விஷயம். அதனால் அந்த நல்ல விஷயங்களை செய்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வோமே...!


மேலும் படிக்க | நவராத்திரியில் சரஸ்வதிபூஜை ஆயுதபூஜை போன்ற வழிபாடுகள் இந்த நவீன யுகத்தில் அவசியமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ