படுக்கையறை எப்படி இருந்தால் இல்லற வாழ்க்கை சுகமாக இருக்கும்..? வாஸ்து டிப்ஸ் இதோ..!
Vastu Shastra Tips for Bedroom: வாஸ்து படி, படுக்கையறையை எங்கு வைத்தால் உங்கள் இல்லற வாழ்வு சுகமாக இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..? டிப்ஸ் இதோ.
உங்களின் இல்லற வாழ்க்கை என்பது தனி நபரான உங்களை பொருத்து மட்டுமல்ல, உங்கள் படுக்கையறை எங்கு அமைந்திருக்கிறது என்பதை பொருத்தும் அமையும். அப்படி, மகிழ்ச்சியான திருமண-காதல் மற்றும் இல்லற வாழ்வு சிறந்து விளங்க சில வாஸ்து டிப்ஸ்.
படுக்கையறை:
உங்கள் படுக்கையறை நீங்கள் புத்துணர்ச்சி பெறும் ஒரு இடமாகவும் ஓய்வெடுக்கும் இடமாகவும் பார்க்கப்படுகிறது. இதை தாண்டி, உங்கள் துணையுடன் இணைந்திருக்கும் இடமும் இதுவே. வாஸ்து சாஸ்திரத்தில், நாம் வாழும் இடங்களில் உள்ள ஆற்றல் நமது நல்வாழ்வையும் உறவுகளையும் ஆழமாக பாதிக்கும் என்று நம்பப்படுகிறது. உங்கள் படுக்கையறையை வாஸ்து படி சீரமைப்பதன் மூலம், நீங்கள் நேர்மறை ஆற்றலின் எண்ண ஓட்டத்தையும் மேம்படுத்தலாம் என கூறப்படுகிறது. மேலும், வலுவான மற்றும் இணக்கமான இல்லற உறவை வளர்ப்பதற்கு உகந்த சூழலை வாஸ்து உருவாக்கித்தருகிறது. உங்கள் படுக்கையறை வாஸ்துவை வலுவான உறவுக்கு தயார்படுத்துவதற்கான அத்தியாவசிய குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.
படுக்கையை எங்கு வைக்க வேண்டும்..?
உங்கள் படுக்கையை படுக்கையறையின் தெற்கு அல்லது தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும். படுக்கையை வைப்பதற்கு இது மிகவும் சாதகமான திசையாக வாஸ்து சாஸ்திரத்தில் நம்பப்படுகிறது. படுக்கையின் தலைப்பகுதி ஒரு சுவருக்கு ஒட்டியது போல வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். அதை ஜன்னலுக்கு அருகில் வைப்பதைத் தவிர்க்கவும். கதவின் எதிர் திசையிலும் படுக்கை இருக்க கூடாது. உங்களின் படுக்கை, இரண்டு முனைகள் சேரும் மூலையில் இருக்க கூடாது.
சுவர்களின் நிறங்கள்:
உங்கள் படுக்கையறையை மென்மையான நிறங்களால் வண்ணம் தீட்டுங்கள். பேஸ்டல்கள் அல்லது மண் டோன்கள் போன்ற இனிமையான வண்ணங்களைத் தேர்வு செய்யவும். இது பார்த்தவுடன் நம் மனதை சாந்தப்படுத்த உதவுமாம். பிரகாசமான அல்லது பளிச்சென்ற வண்ணங்களைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை நம்முல் பல எண்ணங்களை தூண்டக்கூடியவையாக இருக்கலாம். படுகைக்கு அருகில் வைக்கும் நைட் லேம் கூட பளிச்சென்ற வண்ணம் பொருந்தியதாக இல்லாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதையும் இனிமையான வண்ணமாக பயன்படுத்துவத்துங்கள். இது நமக்கே தெரியாமல் நம்முல் ஒரு கவர்ச்சியான சூழ்நிலையை உருவாக்குகிறது. இளஞ்சிவப்பு அல்லது பீச் நிறங்கள் தென்மேற்கு திசையில் அமைந்துள்ள படுக்கையறைகளுக்கு உபயோகிக்கலாம். மேலும், வாஸ்து கொள்கைகளின்படி, நீல நிறம் படுக்கையறைகளில் பயன்படுத்தப்படும் போது அழகு, உண்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. அதே நேரத்தில் பச்சை வண்ணம் பூசப்பட்ட படுக்கையறை மகிழ்ச்சியான மற்றும் இணக்கமான சூழலைக் உணர்த்துவதாக உள்ளது.
கண்ணாடிகளை வைக்கலாமா..?
உங்கள் படுக்கையறையில் கண்ணாடிகளை வைப்பதை தவிறுங்கள். அப்படி உங்கள் படுக்கையறையில் கண்ணாடி இருந்தால் அதை இரவில் தூங்க போவதற்கு முன்னர் எதையாவது வைத்து மூடுவது நல்லது. கண்ணாடிகள் நமக்குள் இருக்கும் ஆற்றல்களை சீர்குலைக்கும் தன்மை உடையதாம்.
வாஸ்து சாஸ்திரங்களின் வழிகாட்டுதலின்படி படுக்கைக்கு எதிர்த்திசையில் கண்ணாடிகளை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் படுக்கையறையில் இருக்கும் கண்ணாடி எவ்வளவு பெரிதாக உள்ளதோ, அவ்வளவு பெரிதாக உங்கள் திருமண உறவில் விரிசல் ஏற்படும் என சில ஜோதிடர்களும் வாஸ்து நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.
அலங்காரம் செய்வது எப்படி..?
காதல், நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை ஊக்குவிக்கும் வகையிலான அலங்காரங்களை படுக்கையறையில் பயன்படுத்தவும். படுக்கையறையின் வடக்கு மூலையில் வீட்டிற்குள் வைக்கும் செடிகளையும், தென்மேற்கு மூலையில் வெள்ளைப் பூக்களையும் வைக்கலாம். இதனால், மணவாழ்க்கையில் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் மேம்படும். வாத்து அல்லது அன்னம் போன்ற குட்டி சிலைகள் போன்ற அலங்காரப் பொருட்களை அறையில் வைத்திருப்பதைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக, ஜோடியாக இருக்கும் அன்னப்பறவைகள் அல்லது கொக்குகள் போன்றவற்றை தேர்வு செய்யவும். ஏனெனில் அவை அன்பையும் ஒற்றுமையையும் குறிக்கின்றன. ஒரு ஜோடி புறாக்கள், காதல் பறவைகள் போன்றவை அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இதனால் படுக்கையறையில் இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.
மேலும் படிக்க | ‘இந்த’ ராசிக்காரர்கள் காதல் ஜோடிகளாக இருந்தால் கண்டிப்பாக ஒத்து வராது..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ