Vastu Tips: ஆரோக்கியமான வாழ்விற்கு வாஸ்து சாஸ்திரம் அளிக்கும் ‘Vastu for Medicines’

வாஸ்து சாஸ்திரத்தில் வீடு 16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலங்களில் ஒன்றான ஈசானிய மூலை எனப்படும் வடகிழக்கு மூலை, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 6, 2020, 07:52 PM IST
  • சமையறையில் மருந்துகளை வைப்பதும், அவற்றை உட்கொள்வதும் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.
  • சமையலறை கட்டுமானம் பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
  • படுக்கையறையில் அடர் வண்ணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
Vastu Tips: ஆரோக்கியமான வாழ்விற்கு வாஸ்து சாஸ்திரம் அளிக்கும் ‘Vastu for Medicines’ title=

மருந்துகளுக்கான வாஸ்து உதவிக்குறிப்புகள்:

'ஆரோக்கியமே மகா பாக்கியம்’ என்று ஒரு பழமொழி உண்டு. வாழ்க்கையை ரசிக்க, உடல் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். சுற்றுச்சூழல் மாசுபாடு, உடலால் செய்யும் வேலைகள் குறைக்கப்பட்டு ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிதல், மக்களின் அலட்சியம் ஆகியவற்றால் ஒரு சாதாரண மனிதனுக்கு தற்போதைய காலங்களில் ஆரோக்கியமாக இருப்பது ஒரு பெரிய சவாலாகிவிட்டது.

இத்தகைய சூழ்நிலையில், நாம் உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு ஆகியவற்றை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். இதனுடன் நம் உடல்நல பராமரிப்பில், வாஸ்து சாஸ்திரத்தின் சில மிக முக்கியமான கொள்கைகளும் நமக்கு உதவுகின்றன.

வாஸ்து சாஸ்திரத்தின் (Vastu Shartra) கீழ் மருந்துகளை நாம் வைக்கும் இடமும் நமது ஆரோக்கியத்தில் அதற்கான விளைவுகளை ஏற்படுத்தும்.

மருந்துகளை வைப்பதற்கான திசைகள்:

வாஸ்து சாஸ்திரத்தில் வீடு 16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலங்களில் ஒன்றான ஈசானிய மூலை எனப்படும் வடகிழக்கு மூலை, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. மருந்துகளை வைத்திருக்க இந்த வாஸ்து மண்டலம் ஒரு நல்ல இடமாகக் கருதப்படுகின்றது.

மருந்துகளை இங்கு வைப்பதால், அது மருந்துகளின் செயல்பாட்டை அதிகரித்து, உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் விரைவிலேயே நீங்கள் நோய்களிலிருந்து விடுபடுவீர்கள். இது தவிர, வடக்கு மற்றும் வடகிழக்கிலும் மருந்துகளை வைக்கலாம்.

சில திசைகளில் மருந்துகளை (Medicines) வைத்தால் வீட்டில் எதிர்மறையான விளைவுகளும் ஏற்படலாம். தென்கிழக்கு மற்றும் தெற்கு திசைகளில் மருந்துகளை வைப்பதை நாம் தவிர்ப்பது நல்லது. வடமெற்கில் மருந்துகளை வைத்திருந்தால், மருந்துகளின் குணமாக்கும் விளைவு குறைவாக இருக்கும். இதனால் நீங்கள் குணமடைய அதிக நேரம் ஆகலாம்.

சமையறையில் மருந்துகளை வைப்பதும், அவற்றை உட்கொள்வதும் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். மருந்துகளை உட்கொள்ளும்போது மேற்கு பக்கம் பார்த்து உட்கொள்வது நல்லது.

ALSO READ: Vastu Tips: ஆனந்தம் கொண்டாடும் வீடு! எளிய tips, பெரிய வாழ்க்கை!!

நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ இன்னும் சில முக்கியமான வாஸ்து விதிகளை பின்பற்றுவது அவசியம். அவற்றில் சில Vastu Tips இதோ: 

-வடகிழக்கு திசையில் கழிப்பறைகளை கட்ட வேண்டாம். இந்த திசையில் கழிப்பறை இருந்தால், அது, நரம்பியல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதன் எதிர்மறை விளைவு முக்கியமாக வீட்டுத் தலைவரை பாதிக்கிறது.

-வடகிழக்கு மூலையை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். இங்கு சேரும் குப்பைகள் மற்றும் கழிவுகள் உங்கள் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் மோசமாக பாதிக்கிறது.

-சமையலறை கட்டுமானம் பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. தென்கிழக்கு திசையில் அமைக்கப்படும் சமையலறைகள் பெண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் அதே வேளையில், வடகிழக்கில் அமைக்கப்படும் சமையலறைகள் பெண்களின் உடல்நலனை பாதிக்கலாம்.

-வீட்டில், குறிப்பாக படுக்கையறையில் அடர் வண்ணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

ALSO READ: உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலைத்திருக்க 10 எளிய Vastu Tips இதோ!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News