”வீட்டைக் கட்டிப் பார்...கல்யாணம் பண்ணிப் பார்” என்று கூறுவது வழக்கம். ஒரு வீட்டை கட்டுவதோ வாங்குவதோ ஒரு மிகப் பெரிய விஷயமாகும். இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி என்று குடும்பத்தில் இருவரும் பணிக்குச் சென்று பணம் ஈட்டத் துவங்கிவிட்டாலும், வீடு வாங்குவது என்பது எப்போதுமே எல்லோருக்குமே வாழ்க்கையின் ஒரு மிகப் பெரிய இலக்காகத் தான் இருந்து வருகிறது. ஒரு வீடு இருந்தால் அடுத்த வீட்டிற்கு மனம் ஏங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவ்வாறு நம் வாழ்வின் அனைத்து சேமிப்புகளையும், முதலீடுகளையும் போட்டு நாம் வாங்கும் அல்லது கட்டும் வீடானது நமக்கு நல்ல, மகிழ்ச்சியான நிம்மதியான வாழ்க்கையை தர வேண்டும் அல்லவா? நாள் முழுதும் வேலை செய்து, சோர்வுடன் வீடு வரும் நமக்கு அங்கு அமைதி காத்திருக்க வேண்டும் அல்லவா? நம் வீட்டு குழந்தைகள் நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் அல்லவா? நம் வீட்டில் சண்டை சச்சரவு இல்லாமல், வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும் அல்லவா?


இவை அனைத்தையும் நாம் அடையலாம். வாஸ்து சாஸ்திரத்தின் (Vastu Shastra) படி சில எளிய வழிகளைக் கடைபிடித்தால், சில அம்சங்கள கவனத்தில் வைத்துக்கொண்டால், உங்கள் வீடு ஆனந்தம் கொண்டாடும் வீடாக கண்டிப்பாக இருக்கும்.


வாஸ்துவின் முக்கிய ஐந்து அம்சங்களை பார்க்கலாம்:


ஒரு வீட்டின் வடகிழக்கு (North East) மூலை ஈசான்ய மூலை எனப்படுகிறது. இந்த இடத்தில் எதையும் கட்டாமல் விடுவது நல்லது. பிளாட்டுகளில் வசிப்பவர்கள், காலியாக விட வழி இல்லாதவர்கள், ஈசான்ய மூலையில் படுக்கை அறையோ அல்லது கழிப்பறையோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பூஜை அறை இருப்பது உசிதமாக இருக்கும். குழந்தை பாக்கியம் அமைய, கடன்கள் நீங்க ஈசான்ய மூலையில் கவனம் தேவை.


ALSO READ: ஆடி அமாவாசை; மாலை 3.28 மணிக்கு மேல் இந்த ராசிக்கு சந்திராஷ்டமம்....இன்றைய பலன்


வீட்டின் தென்கிழக்குப் (South East) பகுதி அக்னி மூலை ஆகும். பஞ்ச பூதங்களில் ஒன்றாகக் கருதப்படும் நெருப்பின் பகுதியாகும் இது. வீட்டில் இந்த அக்னி மூலை பாதிக்கப்பட்டால், அந்த வீட்டின் பெண்களின் உடல்நிலை பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. அக்னி மூலையில் சமயல் அறை இருப்பது உசிதம். பூஜை அறையும் இருக்கலாம். இந்த மூலையில், படுக்கை அறை, படிக்கட்டுகள், மேல்நிலை தண்ணீர் தொட்டி, குளியலறை, கழிப்பறை ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. அக்னி மூலை சுத்தமாக பராமரிக்கப்பட்டால், வீட்டில் உள்ளவர்களின் சுகாதாரம் மேன்மையாக இருக்கும்.


குழந்தைகளின் படிப்புக்கு உகந்த திசை எது? பொதுவாக மேற்கு திசையில் உள்ள அறை குழந்தைகளின் படிப்பின் அறையாக இருப்பது நல்லது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அங்கு குழந்தைகள் கிழக்கு நோக்கியும், வடக்கு நோக்கியும் படிப்பது உசிதமாக இருக்கும், உதயமாகும் சூரியனைப் போல, குழந்தைகளின் கலைகளும் கல்வியும் உதயமாகும்.


வீட்டின் மத்தியப் பகுதியை முடிந்தவரை காலியாக வைப்பது நல்லது. அனைத்து திசைகளிலிருந்து நேர்மறை சக்திகள் ஒன்றுகூடும் இடமாக இவ்விடம் இருப்பதால், இவ்விடத்தை காலியாக வைப்பது பல நல்ல பலன்களை அமைத்துக் கொடுக்கும்.


வீட்டின் முக்கிய கதவு எப்போதும் உள் நோக்கி திறக்கும் வகையில் இருக்க வேண்டும். இது நல்ல பலன்களையும் நேர்மறை சக்தியையும் உள்பக்கமாக, வீட்டிற்குள் அழைத்து வரும்.