மரங்கள் மற்றும் செடிகளுக்கு நம் வாழ்வில் ஒரு தனிப்பட்ட முக்கியத்துவம் உண்டு. மரங்கள் மனித வாழ்க்கையின் அடிப்படையாகும், மரங்களும் செடிகளும் இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. மரங்களுக்கும் செடிகளுக்கும் வாஸ்துவில் ஒரு தனிப்பட்ட முக்கியத்துவம் உண்டு.வீட்டின் தோட்டத்தில் மரம் மற்றும் செடிகளை நடுவது என்பது பலருக்கும் மிகவும் பிடித்த விஷயம். அபார்மெண்டுகளிலும் கூட பால்கனியில் செடிகளை தொட்டிகளில் நடும் பழக்கம் நம்மிடையே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீட்டில் செடிகளை நடுவதால் பல நன்மைகள் உள்ளன. துளசி, தாமரை போன்ற செடிகளை வீட்டில் நட்டால், வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவுவதோடு, காற்றின் தரம் நன்றாக இருக்கும். இவை வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரக்கூடிய மரங்கள் மற்றும் செடிகள் ஆனால், சில செடிகள் வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தையும் தரித்திரத்தையும் கொண்டு வரும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த செடிகளை வீட்டில் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவை இருந்தாலும் உடனே அகற்றி விடவும். 


மருதாணி செடி


மருதாணி செடியை வீட்டில் நடுவது நல்லதல்ல. மருதாணி செடியில், தீய சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த செடி வீட்டில் இருந்தால், வீட்டில் அமைதியும் சந்தோஷமும் இருக்காது என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள். இதனால் வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருக்க இயலாது. பண இழப்பும் ஏற்படும். எனினும் மருதாணி செடியை வீட்டிற்கு வெளியில் வைக்கலாம் என சிலர் கூறுகின்றனர்.


பால் வடியும் தாவரங்கள்


வாஸ்து சாஸ்திரத்தின் படி, பால் வடியும் செடிகளையும் மரங்களையும் ஒருபோதும் வீட்டில் வைக்கக்கூடாது. அதாவது செடியின் இலையை அல்லது கிளையை ஒடித்தால் அதில் இருந்து பால் போன்ற ஒட்டும் பொருள் வெளியே வரும் வகையிலான செடிகள் அல்லது மரங்களை வீட்டில் வைப்பது உசிதமல்ல. இந்த செடிகளை வீட்டில் வைத்தால், அது ஏற்படுத்தும் எதிர்மறை தாக்கம் வீட்டில் தரித்திரத்தையும், குழப்பமான சூழ்நிலையை உருவாக்கக் கூடும்.


மேலும் படிக்க | Astro Traits: தேன் ஒழுக பேசி காரியத்தை சாதித்துக் கொள்ளும் ‘5’ ராசிகள்


புளிய மரம்


புளி சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும், ஆனால் அதை வீட்டில் வைப்பது தீமைகளை ஏற்படுத்தும். புளியஞ் செடியை ஒருபோதும் வீட்டில் நடக்கூடாது. வாஸ்து சாஸ்திரத்தில் இது சிறந்ததாக கருதப்படுவதில்லை. இது உங்கள் வாழ்க்கையில் நிறைய சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மேலும், குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படலாம். புளி செடியை நடுவதால் வீட்டில் எப்போதும் அச்சம் நிறைந்த சூழல் இருக்கும் எனவும் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்த செடியை வீட்டில் நட மறக்காதீர்கள்.


முள் கற்றாழை செடி


வீட்டில் முட்கள் உள்ள காற்றாழை செடியை நடுவது மகிழ்ச்சியை அழிக்கும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த செடியை வீட்டில் நடுவதால் சண்டை சச்சரவுகள் ஏற்படும். வீட்டில் யாரும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. இந்த செடி வீட்டில் வெற்றி பெற முடியாமல் தடையை ஏற்படுத்தும். 


மேலும் படிக்க | பர்ஸில் என்றென்றும் பணம் நிறைந்திருக்க வேண்டுமா... ‘இவற்றை’ செய்தால் போதும்.!!


பேரீச்சை மரம்


பேரீச்சை மரத்தை வீட்டில் வைப்பதும் தீங்கு விளைவிக்கும் என கூறப்படுகிறது. பேரீச்சை மரத்தை வீட்டில் வளர்த்தால் பண விரயம் ஏற்படும் என கூறப்படுகிறது. மேலும், இந்த வீட்டில் பணம் தங்குவதில்லை. நீங்கள் பணம் விஷயம் தொடர்பாக பல இடையூறுகளை எதிர்கொள்ள நேரிடும்.


இலந்தை மரம்


வாஸ்து சாஸ்திரத்தின் கூற்றுப்படி, வீட்டில் இலந்தை மரம் வைப்பது மிகவும் எதிர்மறையான தாக்கத்தை தரும் என்று நம்பப்படுகிறது. இந்த மரம் உங்கள் வீட்டிற்கு வறுமையை கொண்டு வரலாம். மேலும் வீட்டில் ஏற்படும் எதிர்மறை தாக்கத்தினால், வீட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சௌபாக்கியத்தை அருளும் ‘சுக்ரன்’ கிரகம் வலுவாக இருக்க சில பரிகாரங்கள்


மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; பண மழையில் நனையப் போகும் 3 ராசிக்காரர்கள்


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ