சூரிய குடும்பத்தின் கிரகங்களீல் நிலைகள் நம் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகங்ளுக்கும் நமது வாழ்க்கையின் சில அம்சங்களுடன் தொடர்பு உள்ளது. ராசி மாற்றங்கள், இந்த கிரகங்களின் இயக்கம் அனைத்து 12 ராசிக்காரர்களையும் பாதிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுக்ரன் கிரகத்தைப் பற்றி பேசுகையில், இந்த கிரகம் ஆடம்பர வாழ்க்கை, திருமண வாழ்க்கை, காதல், அழகு, ஆகியவற்றின் காரணியாகும். இந்த கிரகம் அசுப நிலையில் இருந்தால், அந்த ஜாதகக்காரர் வாழ்க்கையில் வறுமையில் வாழ்கிறார். அதோடு, அவரது காதல் வாழ்க்கை அல்லது திருமண வாழ்க்கை கூட நன்றாக இருக்காது.


சுக்கிரன் கிரகம் சமீபத்தில் தனது ராசியை மாற்றி மகர ராசியில் நுழைந்துள்ள நிலையில், மார்ச் 31 வரை இந்த ராசியில் இருக்கும். இந்த நேரத்தில் சுக்கிரன் கிரகம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும்.


மார்ச் 2022-ன் அதிர்ஷ்ட ராசிகள் 


மேஷம்: இந்த காலம் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழிலில் பல நன்மைகளைத் தரும். பணம் வரவு மிகவும் சாதகமாக இருக்கும். சொத்து வாங்கலாம். நீங்கள் புதிய கார் அல்லது சில மதிப்புமிக்க பொருட்களை கூட வாங்கலாம். உங்களுக்கு மரியாதை கிடைக்கும். காதல், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்.


ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் அதிர்ஷ்டம் நிறைந்த காலமாக இருக்கும். உங்கள் தொழிலில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவதற்கான முழு வாய்ப்புகள் உள்ளன. முதலீடு செய்யலாம். உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.


மேலும் படிக்க | காதல் உறவை ஒரு போதும் கைவிடாத ‘5’ ராசிக்காரர்கள்..!!


தனுசு : தனுசு ராசிக்காரர்களுக்கு மார்ச் 31, 2022 வரையிலான காலம் நன்மை தரும். நிதி நிலை வலுவடையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். மொத்தத்தில் இந்த காலம் அருமையாக இருக்கும்.


மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் வேலை, வியாபாரம் போன்ற விஷயங்களில் சிறப்பாக இருக்கும். வேலையில் வெற்றி உண்டாகும். பாராட்டு பெறுவீர்கள். பணம் கிடைக்கும் .காதல் வாழ்க்கை புதிய உச்சங்களை தொடும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்கவில்லை.)


மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும்


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR