புதுடில்லி: சமூக ஊடகங்களில் இதுபோன்ற பல வீடியோக்கள் வைரல் ஆவதைப் பார்க்கலாம். இவை கொடுக்கும் இன்ப அதிர்ச்சிகள் நம்ப முடியாதவை. இளம் குழந்தைகள் மற்றும் விலங்குகளின் வீடியோக்கள் வைரலாகின்றன. பார்ப்பதற்கும் ஆசையாக இருக்கிறது.  மிகவும் அழகான இயக்கங்கள் கேமராவில் இயல்பாக படம் பிடிக்கப்பட்டு நமது இதயத்தில் குடியேறுகின்றன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத்தி மொழி சிங்கத்திற்கு தெரியுமா?  


கிர் தேசிய பூங்காவிலிருந்து மிக அழகான வீடியோ வெளிவந்துள்ளது. இந்த வீடியோவில், கிர் வனத்தின் காவலாளரான மகேஷ் சோண்டர்வா தனது வேலை முடிந்ததும் வீட்டிற்குச் செல்கிறார். அப்போது, நடு வழியில் சிங்கம் ஒன்று சாலையில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறார். வன ராஜாவிடம் பயப்படுவதற்குப் பதிலாக, சிங்கத்திடம் உதவி கேட்கிறார் கேட்கிறார். அவர், நாள் முழுவதும் சிங்கம் போன்ற விலங்குகளுடன் இருப்பவர். மகேஷ், குஜராத்தி மொழியில் சிங்கத்திடம் அணுக்கமாக பேசுகிறார். 



குஜராத்தியில் உதவி கோரப்பட்டது
 
சிங்கம் அவர் சொன்னதை புரிந்து கொண்டது போல, நடுச்சாலையில் இருந்து எழுந்து, அவர்கள் செல்ல வழி விடுகிறது. இதை வீடியோவில் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. மகேஷ் இந்த வீடியோவை பதிவு செய்து வனத்துறை சேவையின் அதிகாரி டாக்டர் அன்ஷுமனுடன் பகிர்ந்து கொண்டார். வனத்துறை அதிகாரி, அதனை சமூக ஊடகங்களில் பதிவேற்றினார். பதிவேற்றத்திற்கு பிறகு, அதை பதிவிறக்கியும் பகிர்ந்தும் பலரும் சிங்கத்தை கொண்டாடுகின்றனர். வைரலாகும் வீடியோவை பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுவதோடு, சரணாலயக் காவலர் மற்றும் சிங்கத்துக்குமான பரஸ்பர நட்பையும் புரிதலையும் அனைவரும் ரசிக்கின்றனர்.  


பிரகாஷ் ஜவடேகரும் பகிர்ந்து கொண்டார்
சிங்கத்தின் இந்த சிறப்பான வீடியோவை மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் (Prakash Javadekar) தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளார்.



நம்ப முடியவில்லையா? படித்துப் பாருங்கள் | கொரோனா காலத்தில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகையை கொடுக்கும் நாடு எது தெரியுமா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR