அயர்லாந்து: ஒரு நாய் முகக்கவசம் அணிந்து நடந்து செல்லும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் (Social Media) வைரலாகியுள்ளது. இந்த வீடியோ அயர்லாந்தில் எடுக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ட்விட்டர் பயனர் டாராக் வார்ட் ஒரு பெண் தனது நாயை வாக்கிங் அழைத்துச் செல்வதைக் கண்டார். நாயை வாக்கிங் கூட்டிப்போவது ஒரு பொதுவான விஷயம்தான், ஆனால், இந்த நாயிடம் ஒரு வித்தியாசம் இருந்தது. இந்த நாய் ஒரு முகக்கவசத்தையும் (Facemask) அணிந்திருந்தது.


மாஸ்க் போட்ட அந்த நாயின் வைரல் வீடியோவை (Viral Video) இங்கே காணலாம்:


வைரல் வீடியோவை இங்கே காண்க:



இந்த வீடியோ மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் வைரலாகியுள்ளது. இதை இதுவரை 90,000 க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 5,000 லைக்குகளையும் இந்த வீடியோ பெற்றுள்ளது.


வீடியோவைப் பார்த்தபின் பெரும்பாலான நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டார்கள், சிரித்தார்கள். சிலருக்கு, இந்த நாய் சேனிடைசும் செய்துகொள்ளுமோ என்ற சந்தேகமும் வந்தது.


ஒரு பயனர், “மாஸ்க் அணிய மறுக்கும் அறிவற்றவர்களுக்கு இந்த நாய் ஒரு எடுத்துக்காட்டு.  இது அவர்களை விட அதிபுத்திசாலி” என எழுதியுள்ளார்.


ALSO READ: வாளால் வெட்டப்பட்ட Birthday Cake வைரலானவுடன் வம்பாகிப் போனது!!


இருப்பினும், செல்லப்பிராணிகளை முகக்கவசம் அணிந்து நாம் பார்ப்பது இது முதன்முறையல்ல.


ஆகஸ்டில், ஈக்வடார், அம்பாடோவில் சைக்கிளில் செல்வதற்கு முன்பு ஒரு சிறுவன் தானும் முகக்கவசம் அணிந்து தனது நாய்க்கும் மாஸ்கை அணிவித்து, பின்னர் சைக்கிளில் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டது. அந்த வீடியோவை இங்கே காணலாம்:



முகக்கவசம் அணிந்த செல்லப்பிராணிகளின் புகைப்படங்கள் முன்னரும் வைரலாகியுள்ளன.


சிலர் இந்த நெருக்கடியான நேரத்திலும் இன்னும் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றாமலும், முகக்கவசங்களை அணிந்து கொள்ளாமலும் வெளியே செல்கின்றனர். அவர்கள் இப்படி செய்வதால், அவர்களும் தொற்றுக்கு ஆளாக நேரிடலாம், மற்றவர்களுக்கும் இது ஆபத்தாக அமையலாம். விலங்குகள் நமக்கு பல விஷயங்களைக் கற்றுக்கொடுக்கின்றன. ‘மாஸ்க் அணியாமல் வெளியே போகாதே’ என்ற கருத்தையும் இப்போது விலங்குகள் நமக்கு புரிய வைத்து வருகின்றன. 


ALSO READ: Ireland-லிருந்து வந்த alert, சென்னையில் பிடிபட்ட திருடன்: Hero-வான Technology!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR