இணையத்தை கலக்கும் சோப்பிட்டு கைகளை கழுவும் ரக்கூனின் வைரல் வீடியோ!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் தோற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாடே ஈடுபட்டு வரும் நிலையில், ஒரு பகுதியாக கை கழுவுதல், கைகளை சுத்தப்படுத்துதல் மற்றும் சமூக விலகல் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம். உங்கள் கையின் ஒவ்வொரு அங்குலத்தையும் சுத்தப்படுத்தி, வைரஸை விரட்டியடிக்க சுமார் 20 விநாடிகளாவது கை கழுவுவ வேண்டும் என்பதுதான் சரியான வழி என சுகாதார அதிகாரிகள் பகிர்ந்து வருகின்றனர்.


இதை சித்தரிக்கும் பல வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்திய வன சேவைகள் (IFS) அதிகாரி பர்வீன் கஸ்வானும் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபோன்ற ஒரு ரக்கூனின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ஆம், நீங்கள் அதை சரியாகப் படித்தீர்கள்.


"எல்லோரும் கவனமாக கைகளை கழுவ வேண்டும். ரக்கூனின் இரண்டாவது டெமோ. கவனமாக பாருங்கள். டிக்டோக் வீடியோ" என்ற தலைப்பில் அவர் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.



சுமார், 15 விநாடிகள் கொண்ட வீடியோவில் ஒரு ரக்கூன் கைகளை நன்கு கழுவுவதைக் காட்டுகிறது. விலங்கு முதலில் தண்ணீரில் நிரப்பப்பட்ட கிண்ணத்தில் கைகளை வைக்கிறது. இரண்டாவது படிக்கு, இது ஒரு நல்ல அளவு சோப்பை எடுத்து கைகளில் நன்றாக தேய்க்கிறது. இறுதி கட்டமாக, ரக்கூன் அதன் கைகளை மீண்டும் தண்ணீரில் கழுவுகிறது.


இந்த வீடியோவை வெளியிடப்பட்ட பிறகு, அது உடனடியாக வைரலாகி, 17 k-க்கும் மேற்பட்ட பார்வைகளையும் 1.7k-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றது. இந்த வீடியோ ட்விட்டர் பயனர்களின் மனதைக் கவர்ந்துள்ளதுடன், பல கருத்துகளையும் பெற்றுள்ளது.