கிராம தலைவர் இறப்பு சான்றிதழில் "ஒளிமயமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்" என குறிப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம் அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், இறப்பு சான்றிதழில் "ஒளிமயமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்" என கிராம தலைவர் குறிப்பிட்ட வினோதமான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. 


உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் கடந்த மாதம் இறந்த ஒரு முதியவரின் விருப்பத்துடன் ஒரு கிராம சர்பஞ்ச் இறப்புச் சான்றிதழை வழங்கினார். அசோஹா தொகுதியில் உள்ள சிர்வாரியா கிராமத்தில் ஜனவரி 22 ஆம் தேதி ஒரு வயதான நபர் லக்ஷ்மி சங்கர் நீண்டகால நோயால் இறந்தார். 


இதனையடுத்து  பண பரிவர்த்தனை பெயர் மாற்றத்திற்காக அவரது மகன் சர்பஞ்ச் பாபுலாலிடம் சென்று, சில நிதி பரிவர்த்தனைகளுக்குத் தேவையான இறப்புச் சான்றிதழை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இந்நிலையில், சமீபத்தில் பாபுலால் இறப்பு சான்றிதழ் வழங்கி உள்ளார்.



அந்த இறப்பு சான்றிதழில், "இவரின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துக்கள்" என எழுதி கையெழுத்திட்டுள்ளார். இந்த இறப்பு சான்றிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, மன்னிப்புக் கேட்டுள்ள பாபுலால், புதிய இறப்பு சான்றிதழையும் வழங்கி உள்ளார்.