பிறந்தவுடன் கோபத்தில் மருத்துவரைப் பார்த்த குழந்தை.. வைரலான புகைப்படம்
மருத்துவர்களை கோபமாக பார்க்கும் புதிதாகப் பிறந்த குழந்தையின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
புது டெல்லி: பிப்ரவரி 13 வியாழக்கிழமை பிற்பகலில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிசேரியன் வழியாக இசபெலா பெரேரா டி ஜேசுஸ் பிறந்த தருணத்தை கைப்பற்ற ரோட்ரிகோ அங்கிருந்தார்.
பொதுவாக குழந்தைகள் பிறக்கும் போது அழுதுக்கொண்டு இருப்பார்கள் இல்லையென்றால், மருத்துவர்கள் அவர்களை அழத்தூண்டுவார்கள். ஏனென்றால் அதன்மூலம் அவர்களின் நுரையீரல் சரியாக வேலை செய்கிறது என்பதை அவர்கள் அறிவார்கள்.
ஆனால் குழந்தை இசபெலாவு பிறந்தவுடன் அழவில்லை. மகப்பேறு மருத்துவர்களை கோபமாக முறைத்துப் பார்ப்பது போல பார்த்தது. உடனடியாக இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலானதோடு மட்டுமில்லாமல், பல வகையான மீம்ஸ்கள் உருவாக்க காரணமாக மாறியது.
ரோட்ரிகோ தனது பேஸ்புக்கில் அற்புதமான இந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார்.
இதுக்குறித்து பேசிய ரோட்ரிகோ, "அவள் கண்களை அகலமாகத் திறந்தாள், அழவில்லை, அவள் ஒரு "கோபமான" முகத்தை உண்டாக்கினாள். அவளுடைய அம்மா ஒரு முத்தம் கொடுத்தாள். தொப்புள் கொடியை வெட்டிய பின்னர்தான் அவள் அழ ஆரம்பித்தாள்.
"நான் அதை பகிரும் போது, அது எங்களின் ஒரு நினைவாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அது வைரலானது என்பது அதிர்ஷ்டத்தின் விஷயம்" என்றார்.