விஆர்எஸ் வாங்குவது நல்லதா? யாருக்கு இது பலனளிக்கும்? யாருக்கு பிரச்சனை?
Voluntary Retirement Scheme: வேலையில் இருந்து விஆர்எஸ் பெற, முழுமையான செயல்முறை உள்ளது. அதை ஊழியர்கள் பின்பற்ற வேண்டும்.
அரசுப் பணியிலோ அல்லது ஏதாவது பிற நிறுவனத்திலோ தொடர்ச்சியாகப் பணிபுரியும் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஓய்வு அளிக்கப்படுகிறது. பொதுவாக ஓய்வு பெறும் வயது 58 முதல் 60 ஆண்டுகளாக இருக்கும். ஆனால் நீங்கள் முன்கூட்டியே ஓய்வு பெற விரும்பினால், அல்லது வேலையை தொடர முடியாதபடி வாழ்க்கையில் ஏதாவது முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், நீங்கள் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் (விஆர்எஸ்) கீழ் ஓய்வு பெறலாம்.
வேலையில் இருந்து விஆர்எஸ் பெற, முழுமையான செயல்முறை உள்ளது. அதை ஊழியர்கள் பின்பற்ற வேண்டும். இதற்கு, இதற்கான அதிகாரியிடம் 3 மாத காலத்துக்கு முன்னதாக இதற்கான நோடீஸ் அளிக்க வேண்டும். மேலும் நீங்கள் விஆர்எஸ்-க்கான தகுதிச் சேவையை முடித்துவிட்டீர்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். உங்களுக்கும் விஆர்எஸ் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்து, நீங்கள் விஆர்எஸ் எடுக்க முடிவு செய்திருந்தால், சில விஷயங்களை பற்றி நீங்கள் கண்டிப்பாக யோசிக்க வேண்டும். இப்போது இருக்கும் சூழ்நிலைக்காக விஆர்எஸ் வாங்கிவிட்டு, பின்னர் நீங்கள் வருத்தப்படும் நிலை ஏற்படக்கூடாது. ஆகையால் அப்படி வருத்தப்படாமல் இருக்க, நீங்கள் சில முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.
மீண்டும் ஒரு முறை யோசித்துக்கொள்ளுங்கள்
முதலில், விஆர்எஸ்-இன் முடிவு குறித்து ஒரு முறைக்கு இரு முறை யோசித்துக்கொள்ளுங்கள். உங்கள் நிலைமையை மதிப்பிடுங்கள்- விஆர்எஸ் நேரத்தில் உங்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் மற்றும் நீங்கள் விஆர்எஸ் எடுக்கவில்லை என்றால் எவ்வளவு போனஸ், இன்கிரிமென்ட் போன்றவை கிடைக்கும் என்று ஆராய வேண்டியது அவசியம். இந்த கணக்கீட்டின் மூலம், நீங்கள் விஆர்எஸ் எடுக்க வேண்டுமா இல்லையா என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். விஆர்எஸ் வாங்கிய பிறகு ஏற்படக்கூடும் நிலைமைகளுக்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என நினைத்தால், நோடீஸ் கொடுக்கலாம்.
வருமானத்துக்கான வழிகள்
விஆர்எஸ் வாங்கிய பிறகு உங்கள் வழக்கமான வருமானம் நிறுத்தப்படலாம். விஆர்எஸ்-இன் போது உங்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கிறதோ, அதை நிர்வகித்து உங்கள் செலவுகளை அதற்குள் செய்ய வேண்டும். இந்த சூழ்நிலையையும் நீங்கள் முன்கூட்டியே சிந்திக்க வேண்டும். எனவே, நிதி சிக்கலைச் சமாளிக்க, முன்கூட்டியே வேறு வேலையைத் தேடுங்கள் அல்லது ஒரு தொழிலைத் தொடங்குங்கள். இதனால் நீங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படாது.
அவசரகால நிதியை உருவாக்குவது அவசியம்
விஆர்எஸ் வாங்குவதற்கு முன், நீங்கள் அவசரகால நிதியை உருவாக்க வேண்டும். ஏனெனில் புதிய வருமான ஆதாரத்தைக் கண்டறிய சிறிது நேரம் ஆகும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் அத்தியாவசிய செலவுகளான இஎம்ஐ, பிரீமியம் போன்றவற்றைச் செலுத்துவதில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்க, குறைந்தபட்சம் 12 மாதங்களுக்குப் போதுமான நிதி உங்களிடம் இருக்க வேண்டும்.
கண்டிப்பாக முதலீடு செய்யுங்கள்
எதிர்காலத்தில் நீங்கள் நிதி நெருக்கடியைச் சந்திக்காமல் இருக்க, விஆர்எஸ்- இன் போது நீங்கள் பெறும் மொத்தத் தொகையை முதலீடு செய்ய வேண்டும். இதற்காக, எஸ்ஐபி, தேசிய ஓய்வூதியத் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், தபால் அலுவலக நேர வைப்புத்தொகை, வங்கி எஃப்டி போன்ற பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
மேலும் படிக்க | ஆதார் பான் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கிறதா? ஆன்லைனில் எளிதாக தெரிந்து கொள்ளலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ