தினமும் ‘இதை’ செய்தால் இரத்த அழுத்தம் சீராகும்..செய்து பாருங்களேன்..!
இரத்த அழுத்தம் உள்ளவர்கள், அதை கட்டுக்குள் கொண்டு வர தினமும் சில முயற்சிகளை மேற்கொண்டாலே போதும். அவை என்ன மாதிரியான நடவடிக்கைகள்? இங்கே பார்ப்போம்.
வயதானவர்களும், நடுத்தர வயதினரும் அதிகம் பாதிக்கப்படும் ஒரு நோய் பாதிப்பு, உயர் இரத்த அழுத்தம். இதனை கட்டுக்குள் கொண்டு வர என்ன வழி என்று தெரியாமல் பலர் திணறுவதுண்டு. இதற்கு உடற்பயிற்சி, டயட், நடைபயிற்சி என பல வழிகள் உண்டு.
நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளுடன் தொடர்புடையவை. வயதானவர்கள், தங்களது ரத்த அழுத்தத்தை அளவுடன் வைத்துக்கொள்வது அவர்களை இருதய நோய், பக்கவாதம் போன்ற நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சரி, இதை கட்டுக்குள் கொண்டு வர என்ன வழி?
சமீபத்தில் 68 முதல் 78 வயது வரை இருக்கக்கூடிய வயதானவர்களை வைத்து ஒரு ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் ஒவ்வொருவரும் சராசரியாக 4,000 அடி நடைபயிற்சியை மேற்கொண்டனர். இப்படி தினமும் 3,000 முதல் 4,000 அடிகள் வரை நடைபயிற்சி மேற்கொள்வதால் ரத்த அழுத்தத்தால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் பல உள்ளன. தினமும் 3,000 அடி நடைபயிற்சி மேற்கொள்பவர்கள், நாள்பட்ட நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். இப்படி நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள், இருதய நோய் பாதிப்புகளான மாரடைப்பில் இருந்து தப்பிக்கலாம் என மருத்துவ அறிக்கைகள் சில தெரிவிக்கின்றன.
பிரபல மருத்துவ அறிக்கை ஒன்றில் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தினமும் 3,000 அல்லது அதற்கு மேற்பட்ட அடிகள் நடக்கும் பெரியவர்கள் தங்களது உயர் ரத்த அழுத்ததை கட்டுக்குள் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | நடைப்பயிற்சி மேற்கொண்டால் ஆயுள் அதிகரிக்குமா..! மருத்துவர்கள் கூறுவது இதுதான்..!
தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும் என்று கூறும் மருத்துவர்கள், குறிப்பாக இரத்த அழுத்தம் போன்ற நோய் பாதிப்புகள் உடையோர் கண்டிப்பாக 3000 அடி நடைபயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர். இப்படி தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு ஹைப்பர் டென்ஷன் கட்டுக்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் நடத்தப்பட்ட, மேற்குறிப்பிட்ட அந்த ஆய்வில், உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளோர் 68லிருந்து 71 வயதில் இருப்பவர்கள் 21 பேர் பங்கேற்றிருந்தனர். நடைப்பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்தவுடன் சராசரியாக அவர்களுக்கு 7 மற்றும் 4 புள்ளிகள் ரத்த அழுத்தம் குறைந்துள்ளன. இதில், ஏற்கனவெ ரத்த அழுத்தத்திற்காக மருந்து எடுத்துக்கொள்பவர்களிடம் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடைப்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்:
அனைத்து வயதினரும் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். இதனால் உடலில் நலனும் மன நலனும் மேம்படும்.
>உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும். சரியான எடையை சமநிலையில் வைத்திருக்க உதவும்.
>சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட பல நோய்களை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
>தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் எலும்பு மற்றும் தசைகள் வலுபெறும்.
>உடலில் ஆற்றல் சக்தி அதிகரிக்க உதவும்.
>உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
>மன சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றை போக்கும்.
>வேகமாக நடப்பதால் கொழுப்பை குறைத்து உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.
உடற்பயிற்சி செய்த பிறகு நடக்கலாமா?
சிலர் வர்க் அவுட் செய்த பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்வர். சிலருக்கு நடைப்பயிற்சிக்கு பிறகு வர்க் அவுட் செய்யலாமா என்ற சந்தேகமும் இருக்கும். உண்மையில் உடற்பயிற்சி செய்கையில் நமது தசைகள் அதிகம் வேலை செய்கிறது. இதனால், ஹெவியாக உடற்பயிற்சி செய்த பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்வது பெரிதாக ஆபத்துக்களை விளைவிக்காது என்கின்றனர் மருத்துவர்கள். அது மட்டுமன்றி, தசைகளுக்கு பெரிதும் வேலை தராத பயிற்சிகளான யோகா, நீச்சல், மூச்சு பயிற்சி போன்றவற்றையும் நாம் மேற்கொள்ளலாம்.
மேலும் படிக்க | நடைப்பயிற்சி செய்தால் மாரடைப்பு ஏற்படாதா? எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ