சென்னை: நாட்டின் பல வங்கிகள் (Bank) ஆகஸ்ட் 1 முதல் தங்கள் சேவைக் கட்டணத்தை மாற்றப் போகின்றன. அத்தகைய சூழ்நிலையில், உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு இருந்தால், எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு சில சிரமங்கள் ஏற்பட உள்ளன. இந்த விஷயத்தைப் பற்றி மிகச் சிலருக்குத் தெரியும் என்று நினைக்கிறோம். உண்மையில், பல வங்கிகள் ஆகஸ்ட் 1 முதல் குறைந்தபட்ச நிலுவை பராமரிப்பு மற்றும் பணத்தை திரும்பப் பெறுவதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மஹாராஷ்டிரா வங்கி (Bank of Maharashtra) ஆக்சிஸ் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி மற்றும் ஆர்.பி.எல் வங்கி ஆகியவை பணத்தை திரும்பப் பெறுவதற்கான கட்டணத்தையும் மற்றும் குறைந்தபட்சம் மாத சாரசரியை பராமரிக்கவில்லை என்றால், கட்டணம் விதிக்கப்படும் என கூறியுள்ளது. இந்த நடைமுறை ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.


ALSO READ | உங்களுக்கு வருமானம் குறையலாம்!! சேமிப்பு, வைப்பு கணக்குகளுக்கான வட்டியை குறைக்கும் வங்கிகள்!!


பாங்க் ஆப் மகாராஷ்டிரா, ஆக்சிஸ் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank) மற்றும் ஆர்.பி.எல் வங்கி ஆகியவை ஆகஸ்ட் 1 முதல் பணம் திரும்பப் பெற கட்டணம் வசூலிக்கப் போகின்றன. திரும்பப் பெறுவதற்கு பணம் வசூலிக்கப்படாவிட்டால், இந்த வங்கிகளில் குறைந்தபட்ச மாத நிலுவைத் தொகையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.


மெட்ரோ (Metro City Bank) மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் ஒருவர் சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்பவர் என்றால், குறைந்தபட்சம் மாத சராசரி ரூ . 2000 ஐ பராமரிக்க வேண்டும்,  அதை தவறும் பட்சத்தில் அதிகபட்சமாக அபராதம் விதிக்கப்படும். அதாவது மெட்ரோ மற்றும் நகர்ப்புற கிளைகளில் ரூ .75, புற நகர்ப்புற கிளைகளில் ரூ .50 மற்றும் கிராமப்புற கிளைகளில் ரூ .20 என அபராதம் விதிக்கப்படும்.


நடப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, முந்தைய காலாண்டு பராமரிப்பு விதிமுறைகளுடன் ஒப்பிடும்போது, ​​மாத சராசரி ரூ .5,000 பராமரிக்கப்பட வேண்டும்.


ALSO READ | ஏடிஎம்-ல் பணம் எடுப்பவர்களுக்கு கட்டணம் குறித்து தெளிவுபடுத்திய ரிசர்வ் வங்கி


ஒரு மாதத்தில் மூன்று இலவச பரிவர்த்தனைகள் மேல் திரும்பப் பெறுதல் அல்லது வைப்புத்தொகை மீது ரூ .100 பணத்தை கையாளும் கட்டணம் வசூலிக்கப்படும். லாக்கருக்கான வைப்புத்தொகை குறைக்கப்பட்டாலும், லாக்கர் வாடகை நிலுவைத் தொகைக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


கோடக் மஹிந்திரா வங்கியில் சேமிப்பு மற்றும் கார்ப்பரேட் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, டெபிட் கார்டு-ஏடிஎம் கட்டணங்கள் ஒரு மாதத்திற்கு ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்குப் பிறகு, பணம் திரும்பப் பெறுவதற்கு ரூ .20 ஆகவும், நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ .8.5 ஆகவும் உள்ளன. 


கோட்டக் மஹிந்திரா வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் கணக்கு வகையைப் பொறுத்து சராசரி குறைந்தபட்ச நிலுவைத் தொகையை பராமரிக்காவிட்டால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். தவிர, ஒவ்வொரு நான்காவது பரிவர்த்தனைக்கும் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ .100 ரொக்கமாக திரும்பப் பெறும் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


ALSO READ | மொபைல் இல்லாமல் இனி ஏடிஎம்மில் ரூ.10000 பணம் எடுக்க முடியாது


ஆக்சிஸ் வங்கியும் பெரிய மாற்றங்களைச் செய்யப் போகிறது. இப்போது வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு ஈசிஎஸ் பரிவர்த்தனைக்கும் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். முந்தைய ஈ.சி.எஸ் பரிவர்த்தனை கட்டணம் பூஜ்ஜிய ரூபாய். ஈ.சி.எஸ் உண்மையில் ஒரு வாடிக்கையாளர் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக்கு நிதியை மாற்றக்கூடிய ஒரு சேவையாகும்.