மொபைல் இல்லாமல் இனி ஏடிஎம்மில் ரூ.10000 பணம் எடுக்க முடியாது

ஏடிஎம்மில் இருந்து 10000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை நீங்கள் பெற விரும்பினால் ஓடிபி (OTP) கட்டாயமாக்கியுள்ளது கனரா வங்கி.

Written by - ZEE Bureau | Last Updated : Aug 27, 2019, 03:56 PM IST
மொபைல் இல்லாமல் இனி ஏடிஎம்மில் ரூ.10000 பணம் எடுக்க முடியாது

புதுடெல்லி: ஏடிஎம்களில் அதிகரித்து வரும் மோசடிகளை கவனத்தில் கொண்டு, கனரா வங்கி தனது வாடிக்கையாளர்கள் பயன்களுக்காக ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஏடிஎம்மில் இருந்து 10000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை நீங்கள் பெற விரும்பினால் ஓடிபி (OTP) கட்டாயமாக்கியுள்ளது. நீங்கள் ஏடிஎம்மில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது உங்கள் மொபைலை உங்களுடன் வைத்திருக்க வேண்டும்.

ரொக்கப் பண பரிவர்த்தனையைக் குறைத்துக்கொள்ளுமாறு அரசும், வங்கிகளும் வலியுறுத்தி வருகின்றன. இதற்காக மின்னணு (டிஜிட்டல்) முறையில் பரிவர்த்தனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறது. அதற்காக வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றனர்.

அதேபோல ஏடிஎம்மில் நடைபெற்று வரும் மோசடியைத் தடுக்க, நாட்டின் பல வங்கிகள் பல முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. முதலில் அனைத்து வங்கிகளும் சிப் உள்ள ஏ.டி.எம். கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வினியோகித்தன. தற்போது  ஏடிஎம் பரிவர்த்தனையின் போது 10000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை எடுப்பதற்கு புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏடிஎம் மூலம் 10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்க ஓடிபி கட்டடாயம என கனரா வங்கி அறிவித்துள்ளது. அதாவது வங்கியில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணில் எஸ்எம்எஸ் மூலம் ஒரு OTP எண் வரும். அதை நீங்கள் ஏடிஎம் பின் நம்பருடன் சேர்த்து செலுத்திய பிறகு தான் பணம் எடுக்க முடியும். இந்த வசதியை நாட்டில் முதல் முறையாக கனரா வங்கி அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதுக்குறித்து கனரா வங்கியாளர்கள் குழு கூறுகையில், வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கவும், மோசடிகளைத் தவிர்க்க வழிவகுக்கும் வகையிலும் இந்த புதிய வசதியை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பெரும்பாலான மோசடிகள் காலை 11 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறுகிறது எனக்கூறினார்.

More Stories

Trending News