ஒரே போனில் இரண்டு வாட்ஸ்சப் பயன்படுத்துபவரா நீங்கள்? எச்சரிக்கை!
`மோசி` எனப்படும் மிகப்பெரிய இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் பாட்நெட்டை உருவாக்கும் போட்களுக்கான ரேங்கிங்கில் சீனாவிற்கு (53 சதவீதம்) அடுத்து இந்தியா (35 சதவீதம்) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையிலான ஆண்ட்ராய்டு ட்ரோஜன் கண்டறியப்பட்டு என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய அறிக்கையின்படி, மூன்றாம் தரப்பு அதிகாரப்பூர்வமற்ற வெர்ஷனான வாட்ஸ் அப்பின் குளோன் செயலி பயனர்களின் செய்திகளை ரகசியமாக உளவு பார்ப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இணைய பாதுகாப்பு நிறுவனமான இஎஸ்இடி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த நான்கு மாதங்களில் ஆண்ட்ராய்டு ஸ்பைவேர்க்கு பின்னால் இருப்பது வாட்ஸ் அப்பின் பிரபலமான ஜிபி வாட்ஸ்அப் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் ஆடியோ மற்றும் வீடியோக்களை உளவு பார்த்து திறம்பட பதிவு செய்யும் திறன்களைக் கொண்டுள்ளன.
மேலும் படிக்க | உங்கள் ஸ்மார்ட்போனில் 5G நெட்வொர்க்கை ஆக்டிவேட் செய்வது எப்படி?
மேலும் அறிக்கையில், கூகுள் பிளேயில் குளோன் செயலி எதுவும் கிடைக்கவில்லை என்றும் அதனால் முறையான வாட்ஸ் அப் உடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பு சோதனைகள் எதுவும் இல்லை என்றும் அதேசமயம் மற்ற வலைத்தளங்களில் இந்த வெர்ஷன்கள் மால்வேர்களுடன் கிடைக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே முதல் ஆகஸ்ட் வரை 'மோசி' எனப்படும் மிகப்பெரிய இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் பாட்நெட்டை உருவாக்கும் போட்களுக்கான ரேங்கிங்கில் சீனாவிற்கு (53 சதவீதம்) அடுத்து இந்தியா (35 சதவீதம்) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த 2021ல் மோசியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதிலிருந்து, இந்த மோசி பாட்நெட் ஆனது தானியங்கு முறையில் இயங்குவதாக அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது. ரிமோட் டெஸ்க்டாப் புரோட்டோகால் தாக்குதல்களில் ரஷ்ய ஐபி முகவரிகள் முக்கியா பொறுப்பாக இருந்தது, ரான்சம்வேர் மூலம் அதிகம் குறிவைக்கப்பட்ட நாடு ரஷ்யாவாகும். ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களில் கிரெடிட் கார்டு விவரங்களுக்கு, வெப் ஸ்கிம்மர் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 5G Network in India: விரைவில் 5G ... Reliance Jioவின் முக்கிய அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ