எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை உயிராக நேசிப்பார்கள்.அவர்களை இழக்க யாரும் விரும்புவதில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவை (America) சேர்ந்த ஜான் ரெய்ட் என்பவர், கடந்த வருடம் நடந்த ஒரு கார் விபத்தில் தனது 16 வயது மகனை இழந்து விட்டார். அந்த தந்தையின் கண்ணீர் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அது பார்ப்பவர்களின் கண்களை கலங்க வைக்கிறது.மகனை இழந்த அந்த தந்தை தனது மகனின் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தார். அதில் அவரது மகனின் இதயம் ஒருவருக்கு பொறுத்தப்பட்டு, அவர் உயிர் பிழைத்தார்.


இறந்த மகனின் இதயத்தை பெற்ற அந்த நபர், அந்த தந்தைக்கு ஒரு டெட்டி பியரை பரிசாக அனுப்பினார். அதில் அவரது இதய துடிப்பு ரெகார்ட் செய்யப்பட்டிருந்தது.



அதன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் முதலில் அந்த தந்தை பக்ஸை பிரிப்பதை பார்க்கலாம்.அதில் ஒரு கடிதமும் எழுதப்பட்டிருந்தது. அதை படித்த அவர், உணர்ச்சிவசப்படுகிறார். பின்னர் அந்த டெடி பியர் பொம்மையை எடுத்து, அதன் இதய துடிப்பை கேட்டதும், கண்ணீர் விடுகிறார்.


ALSO READ | ஹேர்கட்டால் தெருவில் சுற்றித்திரிந்த நபரின் வாழ்கையில் நடந்த ட்விஸ்ட்!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR