தனது நடன அசைவுகளால், அசாம் மாநிலம் கவுகாத்தியில், உள்ள ஹோட்டல் ஊழியர் பிரபலம் அடைந்துள்ளார்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அந்தவகையில், ரோபோவே அசரும் அளவிற்கு, கவுகாத்தி ஹோட்டல் ஊழியர் நடனம் ஆடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி (Viral Video) வருகிறது.


அசாம் மாநிலம் கவுகாத்தியில் (Guwahati) உள்ள ஹோட்டலில் சப்ளையராக பணிபுரிந்து வருபவர் 23 வயதான சுரஜித் திரிபுரா (Surajit Tripura). நடனத்தின் மீது பேரார்வம் கொண்ட சுரஜித், சிறுவயதில் இருந்தே, எப்போதும் நடனம் ஆடியபடியே இருப்பார். தாமாகவே, சில நடன அசைவுகளை (Dance Moves) ஆடியபடியே இருக்கும் அவர், அவர் வீடு இருக்கும்பகுதியில் அனைவரிடமும் பிரபலமாக திகழ்ந்து வந்தார்.


ALSO READ | முதலிரவு அறையில் மணமகன் செய்த செயலை பாருங்க.. கதறும் புதுமணப்பெண்!


இந்நிலையில், சுரஜித் ஹோட்டல் ஒன்றில் பணியாளராக சேர்ந்தார். இருந்தபோதிலும், நடனம் மீதான அவரது காதல் தொடர்ந்து கொண்டே இருந்தது. அந்த இடத்திலும், அவர் நடனம் ஆடி சாப்பிட வருபவர்களை உற்சாகப்படுத்தி வந்தார்.



ஹோட்டலில் சாப்பிட வந்த ஒருவரின் பிறந்த நாளை ஒட்டி, அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சுரஜித், பாலிவுட் படமான பாஹி படத்தில் இடம்பெற்ற ‘Girl I Need You’ பாடலுக்கு  அவர் ஆடிய ரோபோ நடனம், அப்பகுதியில் மிகுந்த பிரபலம் அடைந்தது.  அவரது நடன வீடியோவை, அவரது நண்பர்கள், சமூகவலைதளங்களில் பதிவேற்றினர்.


சமூகவலை தளங்களில், இவரது வீடியோவுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து உள்ளது. ஹோட்டல் ஊழியரின் அசாத்திய நடனத் திறமையை, வீடியோவில் பார்த்த அவர்கள், இந்த வீடியோவை வைரல் ஆக்கி, தங்கள் நண்பர்களோடு பகிர்ந்து வருகின்றனர்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR