’Tandav’ என்ற வலைத் தொடர் சர்ச்சை; I&B அமைச்சகம் சம்மன் அனுப்பியது
‘தாண்டவ்’ என்ற வலைத் தொடர் சர்ச்சை தொடர்பாக இந்தியாவின் அமேசான் பிரைம் அதிகாரிகளுக்கு தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் வெளியான வலைத் தொடரான (web series)தாண்டவ் (Tandav) குறித்து சர்ச்சை வெடித்ததை அடுத்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக அதிகாரிகள் அமேசான் பிரைம் வீடியோவின் இந்தியா அதிகாரிகளை விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.
நடிகர்கள் சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா, டிக்மான்ஷு துலியா மற்றும் கிருத்திகா கம்ரா ஆகியோர் நடித்த வலைத் தொடர் வெளியான ஒரு நாள் ஆகியுள்ள நிலையில் பல பாஜக (BJP) தலைவர்கள் இது குறித்து விமர்சித்துள்ளனர். பாஜக தலைவர் ராம் கதம் ஞாயிற்றுக்கிழமை, இந்து தெய்வமான சிவன் கேலி செய்யும் வகையில் வலைத் தொடரில் வசனங்கள் இருப்பதாக குற்றம் சாட்டினார். மேற்கு காட்கோபர் தொகுதி எம்.எல்.ஏ, இந்தத் தொடர் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் என்பதால் அதை அகற்ற வேண்டும் என்று கோரினார். மேற்கு காட்கோபர் காவல் நிலையத்திலும் இது தொடர்பாக FIR பதிவு செய்தார்.
மகாராஷ்டிராவைச (Maharashtra) சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் கோட்டக், வலைத் தொடரை தயாரித்தவர்கள் மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கோர வேண்டும் எனக் கூறினார். இந்து தெய்வங்களை ‘மோசமான வகையில்’ சித்தரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார். வலைத் தொடருக்கு தடை விதிக்கக் கோரி, மும்பை வடகிழக்கு எம்.பி. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஓடிடி (OTT) தளங்களில் வெளியாகும் தொடர்கள் ஆபாசங்கள் நிறைந்ததாக இருப்பதோடு, ‘வன்முறை, போதைப்பொருள், துஷ்பிரயோகம், வெறுப்பு மற்றும் மோசமான செயல்களை’ ஊக்குவிப்பதாகவும் கோட்டக் குற்றம் சாட்டினார்.
தாண்டவ் என்பது கவுரவ் சோலங்கி எழுதிய ஒரு அரசியல் டிராமா கதை. இதை அலி அப்பாஸ் ஜாபர் மற்றும் ஹிமான்ஷு கிஷன் மெஹ்ரா இயக்கியுள்ளனர்.
ALSO READ | OTTயில் வெளியான ஜெயம் ரவியின் 25 வது படமான ’பூமி’ திரைப்பட விமர்சனம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR