Weekly Horoscope: வரும் வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும்
இந்த வாரம் புதன், சூரியன், சனி ஆகியோர் மகர ராசியில் நல்ல யோகத்தை உருவாக்குகிறது. இந்த வாரம் உங்கள் வாழ்க்கையை இந்த யோகம் எப்படி பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
புதுடெல்லி: இந்த வாரம் உங்கள் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் அல்லது செய்யும் வேலைகள் மோசமடையும். மறுபுறம், சில ராசிகாரர்கள் இந்த வாரம் பல சிக்கல்களில் சிக்கிக் கொள்வார்கள். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு (Zodiac Sign) 2021 டிசம்பர் 5 முதல் டிசம்பர் 12 வரை நேரம் எப்படி இருக்கும் என்பதை இங்கே காண்போம்.
மேஷம்: இந்த வாரம் உங்களின் உன்னதமான பணிகளுக்கும், மதம் தொடர்பான பணிகளுக்கும் பணம் செலவாகும். உங்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து சாத்தியமான அனைத்து ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தாரின் மகிழ்ச்சியும் ஒத்துழைப்பும் நன்றாக இருக்கும். இந்த வாரம் நீங்கள் போட்ட புதிய திட்டம் வெற்றியடையும்.
ALSO READ | புதன் கிரகத்தால் இன்று முதல் பெரிய மாற்றம்: 4 ராசிக்காரர்கள் மீது நேரடி தாக்கம்
ரிஷபம் (Taurus): இந்த வாரம் மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். சமயப் பணிகளுக்கு ஏற்ற வாரமாக இருக்கும். இந்த நேரத்தில், வேலை செய்யும் இடத்தில் விடாமுயற்சியுடன் வேலை செய்வோம், ஆனால் உடல் சோர்வு உணர்வு இருக்கும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும்.
மிதுனம்: இந்த வாரம் குடும்பத்துடன் இனிமையாகப் பொழுதைக் கழிப்பீர்கள். பணம் சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் அன்பும், மரியாதையும், ஒத்துழைப்பும் அதிகரிக்கும். வேலைத் துறையில் வெற்றியும் புகழும் பெறுவீர்கள். இந்த வாரம் உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
கடகம்: இந்த வாரம் அரசுத் துறையில் மரியாதையும் லாபமும் கிடைக்கும். உயர்தர மக்களுடன் நல்லுறவு ஏற்படும். இந்த வாரம் மதத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.
சிம்மம்: இந்த வாரம் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணித் துறையிலும், உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடமிருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். நல்ல வருமானம் மற்றும் லாபம் ஈட்ட வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிர்ஷ்டம் இருக்கும். பணியிடத்தில் நல்ல செய்தி கிடைக்கும்.
கன்னி: இந்த வாரம் கலவையாகவும், பலனுடனும் இருக்கும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.
துலாம்: இந்த வாரம் குழந்தைகளின் கல்விக்காக அதிக பணம் செலவழிக்கப்படும். உயர் பதவியில் இருப்பவர்களுடன் இந்த வாரம் நல்லுறவு உருவாகும். குடும்பம் சம்பந்தமான சுபச் செய்திகள் கிடைத்து மகிழ்ச்சியான சூழல் நிலவும். இந்த வாரம் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்: இந்த வாரம் வணிகம் மற்றும் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ளப்படும், இது வெற்றியை நிரூபிக்கும். எடுத்த காரியங்களை சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள், நல்ல வருமானம் ஈட்டுவீர்கள்.
தனுசு: இந்த வாரம் தொழில், வியாபாரம் அல்லது வேலையில் மரியாதை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரம் செலவிடப்படும் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சாத்தியமான அனைத்து ஆதரவும் கிடைக்கும். இந்த வாரம் வேலை தொடர்பான புதிய திட்டங்களை தீட்டி வெற்றி பெறுவீர்கள்.
மகரம்: இந்த வாரம் அரசியலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் கூறும் அறிவுரைகள் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த வாரம் சில நல்ல செய்திகள் கிடைக்கும்.
கும்பம்: இந்த வாரம் மத நம்பிக்கை அதிகரிக்கும். இறைவனை வழிபடுவதால் மன அமைதி கிடைக்கும். இந்த வாரம் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும்.
மீனம் (Pisces): இந்த வாரம் தனது புத்திசாலித்தனத்தால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். குடும்பத்துடன் நல்ல நேரம் செலவிடப்படும். இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | Numerology: புதனின் பரிவர்த்தனையால் பணமழையில் நனையப் போவது நீங்களா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR