பிப்ரவரியில் இந்த ராசியில் 6 கிரகங்களின் சங்கமம்: யாருக்கு ஆதாயம்? யாருக்கு ஆபத்து?

பிப்ரவரி மாதத்தில் சில கிரகங்களின் சேர்க்கையால் அபூர்வ யோகங்கள் உருவாகி வருகின்றன. இந்த மாதத்தின் தொடக்கத்தில் சூரியன், புதன், சந்திரன், சனி ஆகிய கிரகங்கள் மகர ராசியில் இணைந்துள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 2, 2022, 07:40 PM IST
  • ஷட்கிரஹி யோகம் பல விசேஷ பலன்களைக் கொண்டுள்ளது.
  • ஷட்கிரஹி யோகம் மேஷம், ரிஷபம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும்.
  • மிதுனம், தனுசு மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு ஷட்கிரஹி யோகம் சாதகமாக கருதப்படவில்லை.
பிப்ரவரியில் இந்த ராசியில் 6 கிரகங்களின் சங்கமம்: யாருக்கு ஆதாயம்? யாருக்கு ஆபத்து? title=

February Month Horoscope: ஜோதிட சாஸ்திரப்படி பிப்ரவரி மாதத்தில் சில கிரகங்களின் சேர்க்கையால் அபூர்வ யோகங்கள் உருவாகி வருகின்றன. இந்த மாதத்தின் தொடக்கத்தில் சூரியன், புதன், சந்திரன், சனி ஆகிய கிரகங்கள் மகர ராசியில் இணைந்துள்ளன. 

இது தவிர சந்திரனும் சுக்கிரனும் மீண்டும் மகர ராசிக்குள் (Zodiac Sign) நுழைவார்கள். அத்தகைய சூழ்நிலையில், பஞ்சகிரஹி யோகத்தின் சேர்க்கை இருக்கும். மறுபுறம், மகர ராசியில் 4 கிரகங்களின் சேர்க்கையால் தனி கேதார யோகம் உருவாகும். இந்த நிலையில், இந்த கிரகங்கள் அனைத்தும் சேர்ந்து ஷட்கிரஹி யோகத்தை உருவாக்கும். இந்த யோகத்தால் எந்தெந்த ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

ஷட்கிரஹி யோகம் எப்படி உருவாகும்?

தற்போது சனியும் வியாழனும் மகர ராசியில் அமர்ந்துள்ளனர். கடந்த மாதம் சூரியனும் சுக்கிரனும் மகர ராசியில் பிரவேசித்ததால் இந்த ராசியில் சதுர்கிரஹி யோகம் உருவாகிறது. பிப்ரவரி 5 அன்று, புதன் தலைகீழ் இயக்கத்தில் இதில் நுழையும். 

இதைத் தொடர்ந்து பிப்ரவரி 9ஆம் தேதி சந்திரனும் மகர (Capricorn) ராசிக்குள் நுழைகிறார். இதன் காரணமாக சூரியன், புதன், சுக்கிரன், வியாழன், சந்திரன் மற்றும் சனி ஆகியவை மகர ராசியில் ஒன்றாக இருக்கப் போகின்றன. இதன் காரணமாக இந்த ராசியில் ஷட்கிரஹி யோகம் உருவாகும். இது ஜோதிட சாஸ்திரத்தின் படி மிகவும் அரிதான நிகழ்வாகும்.

ALSO READ | சனி பெயர்ச்சி 2022: எந்த ராசிக்கு சூப்பரா இருக்கும் தெரியுமா

இந்த 3 ராசிக்காரர்களுக்கும் மிகவும் நல்ல நேரம் 

ஜோதிட வல்லுநர்களின் கூற்றுப்படி, ஷட்கிரஹி யோகம் மேஷம், ரிஷபம் மற்றும் மீன (Leo) ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். இந்த யோக பலன் மூலம் இந்த ராசிக்காரர்கள் தொழில், பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட அதிக வாய்ப்புகள் உள்ளன. 

இந்த 3 ராசிக்காரர்களும் கவனமாக இருக்க வேண்டும்

மிதுனம் (Gemini), தனுசு மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு ஷட்கிரஹி யோகம் சாதகமாக கருதப்படவில்லை. இந்த யோகத்தால் ஆரோக்கியம் கெடலாம். மேலும், ஏதேனும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி இழப்பும் ஏற்படலாம். ஆகையால் இந்த ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | முதல் சந்திப்பிலேயே முத்திரை பதிக்கும் ராசிகள் இவைதான்: உங்களுக்கும் இந்த ராசியா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News