Senior Citizens: மனித வாழ்க்கையில் எப்போதும் நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பணத்திற்கான அவசியம் ஏற்படுகின்றது. பண தேவை என்பது வயது வரம்பிற்கு அப்பாற்பட்டது. அனைத்து வயதினருக்கும் தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பணம் தேவை. இள வயதிலேயே நமது பணி ஓய்வு காலத்திற்கான சேமிப்பை பற்றியும் திட்டமிட வேண்டும். வயது ஆக ஆக வருமானம் குறைவதும், மூப்பு, நோய்கள் என பணத்திற்கான தேவை அதிகமாவதும் இயல்புதான். மூத்த குடிமக்களுக்கு சீரான மற்றும் நிலையான வருமானத்தை அளிக்கக்கூடிய திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிலையான வைப்பு அதாவது பிக்ஸ்டு டெபாசிட் (Fixed Deposit) என்பது மூத்த குடிமக்களுக்கான ஒரு வளமான வருமான ஆதாரமாக உள்ளது. சில வங்கிகள் வழக்கமான விகிதங்களை விட மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன.


சிறு நிதி வங்கிகள் (Small Finance Banks)


ஸ்மால் பைனான்ஸ் பேங்கஸ் அதாவது சிறு நிதி வங்கிகள், சுமார் 9.50 சதவிகிதம் அளவிலான வட்டி விகிதத்தை மூத்த குடிமக்களுக்கு (Senior Citizens) வழங்குகின்றன. இந்த வங்கிகளிலும் ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான காப்பீடு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பது சதவீதத்தை விட அதிக வட்டியை வழங்கும் 7 அப்படிப்பட்ட ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.


யுனிடி ஸ்மால் பைனான்ஸ் பேங்க்


யுனிடி ஸ்மால் பைனான்ஸ் பேங்க் (Unity Small Finance Bank), 1001 நாட்களுக்கான ஃபிக்ஸ்ட் டெபாசிட்களுக்கு, மூத்த குடிமக்களுக்கு 9.50 சதவிகித வட்டியை (Interest Rates) வழங்குகின்றது. 


உத்ராக்ஷ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்


உத்ராக்ஷ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் (Utkarsh Small Finance Bank), 2 முதல் 3 ஆண்டுகளுக்கான ஃபிக்ஸ்ட் டெபாசிட்களுக்கு, மூத்த குடிமக்களுக்கு 9.10 சதவீத வட்டியை வழங்குகிறது.


சூரியோதய் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்


சூரியோதய் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் (Suryoday Small Finance Bank), 2 முதல் 3 ஆண்டுகளுக்கான ஃபிக்ஸ்ட் டெபாசிட்களுக்கு, மூத்த குடிமக்களுக்கு 9.10 சதவீத வட்டியை வழங்குகிறது.


மேலும் படிக்க | Paytm பயன்படுத்தும் வணிகர்கள் பிற செயலிக்கு மாற வேண்டும்: வர்த்த கூட்டமைப்பு


ஜனா ஸ்மால் பைனான்ஸ் பேங்க் 


ஜனா ஸ்மால் பைனான்ஸ் பேங்க் (Jana Small Finance Bank), 2 முதல் 3 ஆண்டுகளுக்கான ஃபிக்ஸ்ட் டெபாசிட்களுக்கு, மூத்த குடிமக்களுக்கு 9.10 சதவீத வட்டியை வழங்குகிறது.


பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் 


பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் (Fincare Small Finance Bank), 750 நாட்களுக்கான ஃபிக்ஸ்ட் டெபாசிட்களுக்கு, மூத்த குடிமக்களுக்கு 9.11 சதவீத வட்டியை வழங்குகிறது.


ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்


ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் (Equitas Small Finance Bank), 444 நாட்களுக்கான ஃபிக்ஸ்ட் டெபாசிட்களுக்கு, மூத்த குடிமக்களுக்கு 9 சதவீத வட்டியை வழங்குகிறது.


இஎஸ்எஃப் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்


இஎஸ்எஃப் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் (ESAF Small Finance Bank), 2 முதல் 3 ஆண்டுகளுக்கான ஃபிக்ஸ்ட் டெபாசிட்களுக்கு, மூத்த குடிமக்களுக்கு 9.00 சதவீத வட்டியை வழங்குகிறது.


மேலும் படிக்க | சில ஆயிரம் முதலீடு-லட்சக்கணக்கில் லாபம்! ‘இந்த’ தொழில் செய்து பாருங்கள்..


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ