நமது வாழ்கையில் உள்ள ஒவ்வொரு நாளையும் சிறப்பாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம் எல்லோருக்குமே ஒவ்வொரு நாளும் சிறப்பாக அமைய வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக இருக்கும். அப்படி, நாம் வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளாக அமைவதற்கு தெய்வ அனுக்கிரஹம் அவசியம். சரி! தெய்வானுக்கிரஹத்தை பரிபூரணமாகப் பெறுவதற்கு என்ன வழி?. 


அன்றாடம் நமது இறை வழிபாட்டை பங்கமின்றி, ஆத்மார்த்தமாக பூர்த்தி செய்தால் போதும்; நமது இல்லத்தில் இறையருளும் தெய்வ சாந்நித்தியமும் பரிபூரணமாக செழித்தோங்கும். ஒவ்வொரு நாளும் முழுமுதற் தெய்வமாம் விநாயகரையும் (Lord Ganesha), குல தெய்வத்தையும், குறிப்பிட்ட கிழமையின் அதிபதியையும், அதி தேவதையையும் வழிபடுவதன் மூலம் எல்லா நாளும் நல்ல நாளாகவே அமையும்.


விநாயகரையும், குலதெய்வத்தையும் வழிபடும் விவரம் தெரியும். கிழமையின் அதிபதி மற்றும் அதிதேவதை தெய்வங்களை எந்த நேரத்தில் எப்படி வழிபடுவது?. தினமும் காலை வேளையில் சூரிய உதய நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்துக்குள் அந்த நாளின் ஹோரை அமையும்.


ALSO READ | உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக..!!!


அதாவது ஞாயிற்றுக் கிழமை காலை சூரிய உதய நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் சூரிய ஹோரையின் நேரமாகும். இது போல் மற்ற நாட்களுக்கும் ஆரம்ப நேரம் அந்த நாளின் (கிழமையின்) ஹோரையாக வரும். இப்படி, ஒவ்வொரு நாளும் சூரிய உதய நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்துக்குள், அந்தந்த நாளின் கிழமைக்கு உரிய தேவதையை முறைப்படி வழிபடுவதால், அந்தந்தக் கிழமைக்குரிய கிரகத்தின் அருளை நாம் பெறமுடியும்.


ஞாயிறு போற்றுதும்!


ஞாயிறன்று குறிப்பிட்ட கால நேரத்தில் சூரிய பகவானை முழு நம்பிக்கையுடனும் முழுக் கவனத் துடனும் வேண்டி வழிபடவும். இந்த கிழமையில் சூரியதேவனுக்கு சர்க்கரைப் பொங்கல், கோதுமை சாதம், ஆரஞ்சு, செந்நிற ஆப்பிள் பழங்கள் ஆகியவற்றை நைவேத்தியம் செய்வது நல்லது.


பூஜையின்போது மணி ஓசையை எழுப்புவதன் மூலம் ஆகாயமும், ஊதுவத்தி ஏற்றி காற்று மண்டலத்தை வாசனையாக்குவதன் மூலம் காற்று மண்டலமும், குத்து விளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றுவதன் மூலம் நெருப்பு மண்டலமும், பூஜை அறையில் நீர் தெளித்து சுத்தம் செய்வதன் மூலம் நீர் மண்டலமும், உணவு, மலர் சமர்ப்பிப்பதன் மூலம் பூமியும் (நிலமும்) மகிழ்ந்து நமக்கு நன்மைகள் அளித்திடும். சூரியனுக்குரிய மந்திரத்தையோ, காயத்ரியையோ மூன்று முறை சொல்லி வழிபடுவது மிகச் சிறப்பு.


சூரிய வழிபாட்டு மந்திரம்


ஜபா குஸும ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்.


கருத்து: செம்பருத்திப் பூவின் நிறமுடையவரும், காச்யபரின் புதல்வரும், மிகவும் பிரகாசம் உடையவரும், இருட்டின் பகைவரும், எல்லா பாவங்களையும் அழிப்பவருமாகிய பகலவனைப் பணிகிறேன்.


ALSO READ | பூஜை அறையில் வலம்புரி சங்கு வைத்து வழிபடுவதால் கிடைக்கும் மகிமை..!


மங்கலம் பெருக திங்கள் வழிபாடு


திங்கட்கிழமையில் நெய் கலந்த பச்சரிசி பாயசத்தையும், பூவன் வாழைப்பழத்தையும் நைவேத்தியம் செய்வது நல்லது. சந்திரனுக்கு உரிய மந்திரத்தையோ, காயத்ரியையோ மூன்று முறை சொல்லி வழிபடுவதல் குடும்பத்தில் மங்கலம் பெருகும்.


சந்திர வழிபாட்டு மந்திரம்:


ததி ஸங்க துஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம்
நமாமி ஸஸினம் ஸோமம் சம்போர் மகுட பூஷணம்.


கருத்து: தயிர், சங்கு, பனி போன்று வெண்மையானவரும், பாற்கடலில் இருந்து தோன்றியவரும், முயல் சின்னம் கொண்டவரும், ஸோமன் என்று வேதத்தில் அழைக்கப் பெறுபவரும், சிவனாரின் ஜடாமகுடத்தில் அணிகலனாக இருப்பவருமாகிய சந்திரனைப் பணிகிறேன்.