PAN Link: 2023 மார்ச் மாதத்திற்குள் ஆதாருடன் பான் இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும்?
CBDT on PAN Aadhaar Link: PAN அட்டை செயலிழந்தவுடன், வருமானம் தொடர்பான நிலுவையில் உள்ள நடைமுறைகளை முடிக்க முடியாது; பான் கார்டுகள் முடக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது
PAN Aadhaar Link: அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் ஆதாருடன் பான் இணைக்கப்படவில்லை என்றால், அந்த பான் கார்டுகள் முடக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. “பான் கார்டு இணைப்பு கட்டாயம், அவசியம். தாமதிக்காமல் இன்றே இணைக்கவும்!" என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வெளியிட்ட அறிவுறுத்தல்கள் பரிந்துரைக்கின்றன. மத்திய நேரடி வரிகள் வாரியம் தான், வருமான வரித் துறைக்கான கொள்கையை உருவாக்குகிறது என்பதால், இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானது.
“வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, பான் கார்டு வைத்திருப்பதில் இருந்து விலக்கு பெறும் வகையின் கீழ் வராதவர்களும் 31.3.2023 க்கு முன் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். 1.04.2023 முதல், இணைக்கப்படாத பான் செயலிழந்துவிடும்,” என்று சிபிடிடி முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.
2017ம் ஆண்டு மே மாதம், மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, அசாம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் வசிக்கும் நபர்கள்; 1961 ஆம் ஆண்டு வருமான வரிச்சட்டத்தின் கீழ் இந்தியாவில் வசிக்காதவர்கள், 80 வயது அல்லது அதற்கு அதிக வயது கொண்டவர்கள், இந்தியக் குடிமகன் அல்லாதவர்கள் என சில பிரிவைச் சேர்ந்த நபர்கள் பான் கார்டு தொடர்பான விலக்கு வகையின் கீழ் வருவார்கள்.
மேலும் படிக்க | மார்ச் 31 தான் கடைசி தேதி! இவர்களுடைய பான் கார்ட் செல்லாது!
சரி, மார்ச் மாத இறுதிக்குள் ஆதாருடன் பான் இணைக்கப்படவில்லை என்றால் என்ன நடக்கும்?
செயல்படாத பான் எண்ணைப் பயன்படுத்தி வருமான வரியை தாக்கல் செய்ய முடியாது
நிலுவையில் உள்ள வருமான வரி பாக்கி திரும்பக் கிடைக்காது
PAN அட்டை செயலிழந்தவுடன், வருமானம் தொடர்பான நிலுவையில் உள்ள நடைமுறைகளை முடிக்க முடியாது
வருமான வரி அதிக விகிதத்தில் கழிக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும்
அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் முக்கியமான KYC தகவல்களில் பான் கார்டில் ஏற்படும் பிரச்சனையால், வங்கிகள் மற்றும் பிற நிதி இணையதளங்கள் போன்ற பல்வேறு தளங்களில் செயல்படுவதில் பிரச்சனை ஏற்படும்
வரி செலுத்தில் சிக்கல் ஏற்படும்
இந்தியாவில் வசிப்பவருக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் ஆதார் வழங்கப்படுகிறது. பான் என்பது ஒரு நபர், நிறுவனம் அல்லது நிறுவனத்திற்கு IT துறையால் ஒதுக்கப்பட்ட 10 இலக்க எண்ணெழுத்து எண்ணாகும். இந்த இரண்டையும் இணைப்பது தற்போது இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அப்டேட், எப்போது அறிவிப்பு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ