ரயில்பயணத்தின் போது உங்கள் டிக்கெட் தொலைத்துவிட்டதா? ரயில்வே விதிகள் என்ன
ரயில் பயணத்தின் போது உங்கள் ரயில் டிக்கெட்டை தொலைத்துவிட்டால், பயப்படத் தேவையில்லை. இதற்காக ரயில்வே தனி விதிகளை வகுத்துள்ளது.
புதுடெல்லி: ரயில் பயணத்தின் போது உங்கள் ரயில் டிக்கெட்டை தொலைத்துவிட்டால், பயப்படத் தேவையில்லை. இதற்காக ரயில்வே தனி விதிகளை வகுத்துள்ளது.
இந்திய ரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். ஆனால் இந்த பயணத்தின் போது எங்காவது உங்கள் டிக்கெட்டை இழந்தால் என்ன செய்வது. அத்தகைய சூழ்நிலையில், டிக்கெட் பரிசோதகர் வந்தால் என்ன செய்வது என்று அச்சம் ஏற்படலாம்.
ஆனால் நீங்கள் பீதி அடையத் தேவையில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் ரயில்வே சில விதிகளை வகுத்துள்ளது. ரயில் டிக்கெட் தொலைந்தால் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்! உயர்கிறது ரயில்வே கட்டணம்
புதிய டிக்கெட் எடுக்க முடியும்
பயணத்தின் போது உங்கள் டிக்கெட் தொலைந்துவிட்டால், மொபைலில் இருந்து டிக்கெட்டைக் காண்பிக்கும் வசதி கூட உங்களிடம் இல்லை, அந்த சமயத்தில் டிக்கெட் பரிசோதகர் மூலம் புதிய டூப்ளிகேட் டிக்கெட்டைப் பெறலாம். இதற்கு நீங்கள் 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
ஆனால் டிக்கெட் தொலைந்தால், உடனடியாக டிக்கெட் பரிசோதகரை தொடர்பு கொள்ள வேண்டும். முழு விஷயத்தையும் அறிந்த பிறகு, பயணச்சீட்டை சரிபார்த்து ரயில்வே ஒரு புதிய டிக்கெட்டை வழங்கும்.
அபராதம் விதிக்கப்படும்
ரயில்வே விதிகளின்படி, கவுன்டரில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால், ஸ்லீப்பர் வகுப்பிற்கு 50 ரூபாயும், ஏசி வகுப்பிற்கு 100 ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும்.
சார்ட் தயாரித்த பிறகு டிக்கெட்டை இழந்ததாக நீங்கள் புகாரளித்திருந்தால், நீங்கள் டிக்கெட்டில் 50 சதவீதம் வரை அபராதம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | ரயில் பயணத்தில் திருடு போன சாமான்களுக்கு இழப்பீடு கோரலாம்..!!
எந்தவொரு காரணத்திற்காகவும் நீங்கள் இறங்க வேண்டிய ரயில்நிலையத்தை விட அதிக தொலைவு பயணித்தாலும் அதற்கான விதிகளையும் இந்திய ரயில்வே உருவாக்கியுள்ளது, இதற்கு நீங்கள் TTE யிடம் குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தி பயணத்தை நீட்டிக்கலாம்,
ஆனால், டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவிக்காமல், அதிக கட்டணத்தை செலுத்தாமல், பதிவு செய்த தொலைவை விட அதிகமாக பயணித்தால் அதற்கு அபராதம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | அதிக தியேட்டரில் ரிலீசாகும் முதல் படம்: ரெக்கார்டுகளை அடித்து நொறுக்கும் பீஸ்ட்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR