ரயில் பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்: இந்த முக்கிய சேவையும் இனி கிடைக்கும்

இந்திய ரயில்வே இந்திய தபால் துறையுடன் சேர்ந்து பார்சல் துறையில் புதிய முயற்சியை எடுக்கவுள்ளது. இரயில்வே இப்போது நாடு முழுவதும் டோர் டு டோர் டெலிவரி வசதியையும் வழங்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 7, 2022, 05:15 PM IST
  • டோர்-டு டோர் பார்சல் டெலிவரியை இந்திய ரயில்வே தொடங்கவுள்ளது.
  • இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து செயல்படும்.
  • முன்னோடி திட்ட சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்: இந்த முக்கிய சேவையும் இனி கிடைக்கும் title=

புதுடெல்லி: ரயில் பயணிகளுக்கு நல்ல செய்தி. இந்திய ரயில்வே இப்போது நாடு முழுவதும் டோர் டு டோர் பார்சல் டெலிவரி வசதியையும் வழங்கும். ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை மக்களவையில் இது குறித்த ஒரு கேள்விக்கு பதிலளித்தார். 

ரயில்வே இப்போது பார்சல் துறையிலும் தனது பணிகளை செய்யவுள்ளது என்று அவர் கூறினார். இது பார்சல் துறையையும் துரிதப்படுத்தும் என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய தபால் துறையுடன் இணைந்து சேவை தொடங்கப்படும்

இந்திய அஞ்சல் மற்றும் இந்திய இரயில்வேயின் 'கூட்டு பார்சல் தயாரிப்பு' (JPP) உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் மைல் மற்றும் கடைசி மைல் இணைப்பு அஞ்சல் துறையால் வழங்கப்படும். ரயில் நிலையத்திலிருந்து ரயில் நிலையம் வரையிலான இடைநிலை இணைப்பு ரயில்வே மூலம் வழங்கப்படும். 

ஒரு முழுமையான பார்சல் கையாளுதல் தீர்வை வழங்கி, அதன் மூலம் வணிகத்திலிருந்து வணிகம் மற்றும் வணிகத்திலிருந்து வாடிக்கையாளர் சந்தையை இலக்காகக் கொண்டு செயல்படுவது ஜெபிபி-யின் குறிக்கோளாகும். அதாவது அனுப்புநரின் முகவரியிலிருந்து பொருட்களை எடுத்து, பெறுநருக்கு முன்பதிவு செய்வது மற்றும் வீட்டு வாசலில் டெலிவரி செய்வது என அனைத்தும் இப்போது ரயில்வேயின் பொறுப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்! உயர்கிறது ரயில்வே கட்டணம் 

முன்னோடி திட்ட சேவை தொடங்கப்பட்டுள்ளது

இந்திய ரயில்வே மற்றும் இந்திய தபால் மூலம் ஜெபிபி பைலட் திட்ட அடிப்படையில் தொடங்கப்பட்டது. முன்னோடி திட்டத்தின் முதல் சேவை மார்ச் 31, 2022 அன்று சூரத்திலிருந்து வாரணாசிக்கு தொடங்கப்பட்டது.

பல சேவைகள் சேர்க்கப்படும்

ஒரு ரயில் நிலையத்துக்கும் மற்றொரு நிலையத்துக்கும் ரயில்வே மூலம் இணைப்பு ஏற்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். முழுமையான பார்சல் சேவையை வழங்கி, அதன் மூலம், வணிகத்திலிருந்து வணிகம் மற்றும் வணிகத்திலிருந்து வாடிக்கையாளர் தொடர்பை ஏற்படுத்துவதே ஜெபிபி-யின் நோக்கம் என்று வைஷ்ணவ் கூறினார். இதன் கீழ், பார்சல் அனுப்புபவரின் வளாகத்தில் இருந்து பார்சலை எடுத்து, முன்பதிவு செய்து, பெறுபவரின் முகவரிக்கு டெலிவரி செய்யும் சேவையும் உள்ளடக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

மேலும் படிக்க | ரயில் பயணத்தில் திருடு போன சாமான்களுக்கு இழப்பீடு கோரலாம்..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News