108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை பெற்றிருப்பது திருமலை திருப்பதி. இந்த இரண்டு ஆலயங்களுக்கும் பல்வேறு தொடர்புகள் உள்ளன. அதில் சுவாரசியமான ஒன்று. அது ஆடி மாத பிறப்பான இன்றைய நாளுடன் தொடர்புடையது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலிருந்து திருப்பதி வெங்கடாஜலபதிக்கு ஆடி மாதம் முதல் தேதியன்று மங்கலப் பொருட்களுடன் வஸ்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு  மரியாதை செய்யப்படும். இதன் பின்னால் இருக்கும் கதை சுவாரசியமானது.


முகலாய மன்னர்களின் படையெடுப்பின் போது சுமார் 40 ஆண்டுகள் திருப்பதியில் ஸ்ரீரங்கம் கோயிலின் உற்சவ மூர்த்தி பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது.


Also Read | திருப்பதி திருமலையில் நடந்த முதல் திருமணம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? 


இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு ஆடி மாத பிறப்பன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலிருந்து வஸ்திரங்கள் அனுப்பும் பாரம்பரியம் தொடர்கிறது.


ஆண்டுதோறும் ஸ்ரீரங்கத்தின் ரங்கநாதர் கோயில் ரங்கவிலாச மண்டபத்திலிருந்து கோவில் யானை முன் செல்ல மங்கள வாத்தியங்கள் முழங்க வஸ்திரங்கள், குடைகள், பலவிதமான மலர்கள், பழங்கள், மஞ்சள், சந்தனம் என மங்களப் பொருட்கள் திருப்பதி ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும். இந்த நடைமுறை மிகவும் விசேஷமாக நடைபெறும். பல பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வார்கள்.


அந்த பாரம்பரிய நிகழ்வு இன்று நிகழ்ந்தது. ஆடி மாதம் முதல் நாளன இன்று திருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட வஸ்திரங்கள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. ஆடி மாத பிறப்புக்கும் திருமலை திருப்பதி வெங்கடாசலபதிக்கும் மற்றுமொரு சுவாரசியமான தொடர்பு உண்டு. 


Also Read | Tripathi Balaji: திருப்பதி தெய்வத்தின் சனிக்கிழமை பக்தி உலா


திருப்பதி பெருமாள் தன்னுடைய திருமணத்திற்காக  குபேரனிடம் கடன் வாங்கினார் என்பது ஐதீகம். தான் கொடுத்த கடனை திருப்பி செலுத்துமாறு குபேரன். பெருமாளிடம் ஆடி மாதம் முதல் நாளில் கேட்பார் என்று சொல்லப்படுகிறது. 


எனவே ஆடி முதல் நாளில் பக்தர்கள் தமது வீடுகளில் 11 ரூபாய் எடுத்து வைப்பார்களாம். அதாவது என் பக்தர்களின் காணிக்கை மூலம் கடனை திருப்பி செலுத்துவேன் என்று பெருமாள் குபேரனுக்கு சொல்வதற்கு வலு சேர்க்கும் விதமாக இந்த சம்பிரதாயம் கடை பிடிக்கப்படுகிறது.  அந்த 11 ரூபாயை திருப்பதிக்கு செல்லும்போது உண்டியலில் போடுவது வழக்கம்.


தனக்காக பணம் எடுத்து வைக்கும் பக்தனின் பக்தியில் நெகிழும் பெருமாள்,  அவர்களின் மனக்குறைகளை நீக்கி நல்வாழ்வு வாழவைப்பார் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை ஆகும்.


Also Read | பழநி முருகன்-பூம்பாறை வேலப்பர் நவபாஷண சிலைகளின் வித்தியாசம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR