விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமேசான் தளத்தில் `கிஷான் ஸ்டோர்`
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மலிவான விலையில் விவசாய உபகரணங்களை வாங்க கிசான் ஸ்டோர் முக்கியத் தளமாக இருக்கும்.
அமேசான் இந்தியா நிறுவனம் கிசான் (விவசாயி) ஸ்டோரை அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாயிகளை மேம்படுத்துதல் மற்றும் விவசாயத் துறையில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக இந்திய அரசாங்கத்துடன் இணைந்து கிசான் ஸ்டோர் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கடையை விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் (Narendra Singh Tomar) தொடங்கி வைத்தார். அப்பொழுது மத்திய அமைச்சர், "நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் விதைகள், பண்ணை கருவிகள் மற்றும் துணைக்கருவிகள், பயிர் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் பல விவசாய விளைபொருட்களை மலிவான விலையில், கூடுதல் வசதியுடன் அவர்களின் வீட்டுக்கே நேரடியாக (Doorstep Delivery) கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.
விவசாயிகளின் வீட்டிற்கு டெலிவரி:
கிசான் ஸ்டோர் பற்றி அமேசான் நிறுவன அதிகாரி ஒருவர் பேசுகையில், இந்திய விவசாயத்திற்கு ஒரு புதிய அனுபவத்தை இந்த கிசான் ஸ்டோர் வழங்கும். விவசாயிகளுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான எங்கள் முதல் படியாக கிசான் ஸ்டோர் தொடங்கப்பட்டது. மேலும் ஒரே ஒரு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் அவர்களுக்கு தேவையான ஆர்டர்களை வழங்கவும், அவர்களின் வீட்டுக்கே நேரடியாக கொண்டு செல்லவும் உதவும்.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மலிவான விலையில் விவசாய உபகரணங்களை வாங்க கிசான் ஸ்டோர் முக்கியத் தளமாக இருக்கும். ஆன்லைன் தளமான அமேசானில் நாடு முழுவதும் உள்ள 50,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் அமேசான் ஈஸி ஸ்டோர்களில் ஷாப்பிங் செய்யலாம்.
ALSO READ | PM Kisan Samman Nidhi Yojana: உங்கள் தவணை கிடைத்துவிட்டதா என அறிவது எப்படி?
கேஷ் ஆன் டெலிவரி வசதியும் உள்ளது:
அமேசான் ஈஸி ஸ்டோர் (Amazon Easy Store) வசதியை அளிக்கும் உரிமையாளர்கள், "விவசாயிகள் தங்களுக்கு விருப்பமான பொருளை அடையாளம் காணவும், அமேசான் தளத்தில் கணக்கை உருவாக்கவும், ஆர்டர் செய்யவும், அதை வாங்குவும்" உதவுவார்கள். விவசாயிகள் தங்களுக்குத் தேவையானதை அனைத்து விவசாயப் பொருட்ளையும் கிசான் ஸ்டோர் மூலம் வாங்கலாம்.
விவசாயிகள் பொருட்களை வாங்கிய பிறகு, பணத்தை டெபாசிட் செய்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது. அவர்கள பணம் செலுத்த அனைத்து வசதிகளும் உள்ளன. விவசாயிகள் நெட் பேங்கிங், யுபிஐ, அமேசான் பே, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம். அதே சமயம் Cash on Delivery வசதியும் உள்ளது.
ஐந்து மொழிகளில் கிசான் ஸ்டோர்:
தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட ஐந்து மொழிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி விவசாயிகள் Amazon.in இல் ஷாப்பிங் செய்யலாம்.
ALSO READ | Kisan Credit Card மூலம் வாங்கும் கடனை எதற்கு பயன்படுத்த வேண்டும்; அறிந்துக்கொள்க
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR